/indian-express-tamil/media/media_files/2025/04/28/HVfggQvoXIAKeIcx4Duq.jpg)
நம் எல்லோருக்குமே பெருங்காயம் குறித்து ஒரு புரிதல் இருக்கிறது. அதன்படி, செரிமானத்தை சீராக்குவதற்கு பெருங்காயம் உதவி செய்கிறது என்று பலர் நினைக்கின்றனர். குறிப்பாக, மோரில் பெருங்காயம் கலந்து குடிக்கும் போது வாயுத் தொல்லை குணமாகும் என்று கருதுகின்றனர்.
ஆனால், இவை அனைத்தையும் கடந்து வைரஸ் தொற்று பரவுதலையும் கூட பெருங்காயத்தால் கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். இது தொடர்பான ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதாக அவர் தகவலளித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றின் தாக்கம் நாம் அனைவரும் அறிந்ததே. கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த முடியாமல் அதற்கு தடுப்பூசி கண்டறியப்படுவதற்கு முன்பு வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், மக்களின் ஆரோக்கியம் மட்டுமின்றி இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
அதே போன்று, ஸ்பானிஷ் ஃப்ளூ என்ற நோய் ஒரு காலத்தில் பரவியதாக மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அந்த காலத்தில் பெருங்காயத்தை கயிற்றில் சுற்றி, அதனை கழுத்தில் கட்டிக் கொண்டு ஆங்கிலேயர்கள் இருந்தனர் என்று மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கின் ப்ருக்லின் பாலத்திற்கு கீழே பெருங்காயத்திற்கான தொழிற்சாலை அமைந்திருந்தது என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். அப்போது பெருங்காயத்தின் வாசனைக்காக, அதற்கு ஒரு பெயர் வைக்கப்பட்டது. குறிப்பாக, பிசாசின் மலம் என்று பெருங்காயத்திற்கு ஆங்கிலேயர்கள் பெயரிட்டதாக அவர் கூறுகிறார்.
அதன் பின்னர், ஸ்பானிஷ் ஃப்ளூ வைரஸ் பரவலை பெருங்காயம் கட்டுப்படுத்துவதாக பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், பெருங்காயத்திற்கு கடவுளின் மாமருந்து என்று பெயரிடப்பட்டதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார்.
இத்தகைய மருத்துவ குணம் நிறைந்த பெருங்காயத்தில் தற்போது வணிக நோக்கத்திற்காக கலப்படம் செய்யப்படுவதாக மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். அந்த வகையில் கலப்படம் இல்லாத பெருங்காயத்தில் காரத்தன்மை மிக அதிகமாக இருக்கும். அதில் தான் மருத்துவ குணம் அதிகமாக இருக்கிறது என்று மருத்துவர் சிவராமன் அறிவுறுத்துகிறார்.
தற்போது, கூட்டுப் பெருங்காயம் என்று விற்பனை செய்யப்படுவதில் மைதா கலக்கப்படுகிறது என்று அவர் கூறுகிறார். அந்த வகையில் கலப்படமற்ற பெருங்காயத்தை பயன்படுத்துவது மிக முக்கியம்.
நன்றி - Tamil Speech Box Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.