வெயில் காலத்தில் மது அருந்தலாமா? என்ற கேள்விக்கு டாக்டர் சிவராமன் விளக்கம் அளித்துள்ளார்.
டாக்டர் சிவராமன் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசியதாவது: ” 100% சமூகத்தில் ஒதுக்கிவைக்கப்பட வேண்டிய விஷயம் என்பது மது மற்றும் புகை. கோடை காலத்தில் மட்டும் அல்ல எல்லா காலத்திலும் இதை நாம் எடுத்துகொள்ளக்கூடாது. வெயில் காலத்தில் உடலை குளிர்விக்க பீர் குடிப்பேன் என்று பலர் பேசுகிறார்கள். அது மிகவும் முட்டாள்தனமான விஷயம். அது சிறுநீரை அதிகரிக்கக்கூடியதாக இருந்தாலும், அதிலும் 6% அல்கஹால் இருக்கிறது. அந்த அல்கஹால் ஈரலை பாதிக்கும். இதுபோன்ற தவறான கருத்துக்களை நாம் நம்பக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“