மெலிவான குழந்தைகள் உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவுகள் குறித்த பட்டியலை மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். தாய்ப்பாலுக்கு பின்னர் குழந்தைகளுக்கு திட உணவாக நேந்திரம் பழத்தின் கஞ்சியை கொடுக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார். மேலும், சிறுவர்களுக்கு நேந்திர பழத்தை தேனில் கலந்து கொடுக்கலாம் என அவர் கூறியுள்ளார்.
மீன்கள் நாட்டுக் கோழி, முட்டைகள் போன்றவற்றை சிறுவயதில் இருந்து சாப்பிட பழக்கலாம் என சிவராமன் தெரிவித்துள்ளார். மேலும், பெண்களுக்கு வெள்ளைப் பூசணிக்காய் கூட்டு போன்றவற்றை கொடுப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது என அவர் பரிந்துரைத்துள்ளார்.
சோற்றுக் கற்றாழை லேகியம் சாப்பிட்டால் பித்தம் குறைந்து உடல் எடை கூடும் என அவர் தெரிவித்துள்ளார். கடுகு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் ஆகியவற்றை பொடியாக்கி நாட்டு வெல்லம் சேர்த்து, உணவுக்கு முன்பாக கால் ஸ்பூன் அளவிற்கு தேனில் கலந்து சாப்பிட்டால் நன்றாக பசி உணர்வை தூண்டும் என சிவராமன் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“