தினமும் இதைச் செய்தாலே போதும்… பொடுகு தொல்லை நீங்கும்; டாக்டர் சிவராமன்
பொடுகு தொல்லையை போக்குவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றம் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை செய்யும் போது பொடுகு பிரச்சனை குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொடுகு தொல்லையை போக்குவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றம் குறித்து மருத்துவர் சிவராமன் தெரிவித்துள்ளார். இதனை செய்யும் போது பொடுகு பிரச்சனை குறையத் தொடங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
முடி உதிர்வு பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக, இன்றைய சூழலில் இளைஞர்களிடையே அதிகமாக முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது.
Advertisment
இதனை கட்டுப்படுத்துவதற்கு ஷம்பூ, சீரம் போன்ற பொருட்களை பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால், முடி உதிர்வுக்கான காரணத்தை கண்டறிந்தால் மட்டுமே அதனை கட்டுப்படுத்த முடியும்.
அந்த வகையில், வாழ்க்கை முறை மாற்றம், உணவு முறை மாற்றம், தூக்கமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாக முடி உதிர்வு இருக்கும். எனினும், பொடுகு தொல்லையால் முடி உதிர்வு பாதிப்பு இருப்பவர்கள் ஏராளம். அதன்படி, பொடுகு வருவதற்கான காரணம் மற்றும் அதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் சிவராமன் சில டிப்ஸ்களை குறிப்பிட்டுள்ளார்.
தலையில் ஏற்படும் வறட்சி தன்மை காரணமாக பொடுகு உருவாகும் என மருத்துவர் சிவராமன் கூறுகிறார். உடலில் பித்தம் அதிகரித்தால், சூடு அதிகரிக்கும் எனக் கூறும் மருத்துவர் சிவராமன், பித்தத்தை குறைத்தால் பொடுகு தொல்லை நீங்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
அதன்படி, தினசரி காலையில் தலைக்கு குளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். குளிப்பது என்பது வெறும் அழுக்கை நீக்குவதற்காக மட்டுமல்ல எனவும், உடல் சூட்டை குறைத்து குளிர்ச்சியாக்கவும் உதவும் என அவர் கூறியுள்ளார்.
அதேபோல், அடிக்கடி தலைக்கு குளிக்காதவர்களுக்கு தான் பெரும்பாலும் பொடுகு தொல்லை ஏற்படும் எனவும் சிவராமன் தெரிவித்துள்ளார். பொடுகு தொல்லையை நீக்க பல விதமான முயற்சி செய்யப்பட்டு வரும் சூழலில், உடல் சூட்டை குறைப்பதன் மூலம் பொடுகை கட்டுப்படுத்தி விடலாம் என சிவராமன் பரிந்துரைக்கிறார்.
இது போன்ற எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் நம் முடியை பராமரிப்பது மட்டுமின்றி ஆரோக்கியத்தையும் மேம்படுத்த முடியும்.
நன்றி - Healthy Tamilnadu Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.