சொரியாசிஸ்... தோல் நோய்களுக்கு ஃப்ரீ மெடிசின்; தினமும் 20 நிமிடம் இதை செய்யுங்க: டாக்டர் ஸ்வேதா ராணி
சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகள் எதனால் ஏற்படுகிறது என்று மருத்துவர் ஸ்வேதா ராணி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதற்கு சூரிய ஒளி எவ்வாறு மருந்தாக பயன்படுகிறது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
நன்றி - Clair Veda Ayur Clinic Tamil Youtube Channel
சொரியாசிஸ் என்பது சருமத்தின் செல் உற்பத்தியை அளவுக்கு அதிகமாக உருவாக்கும் ஒரு சருமத் தொற்று என்று கூறப்படுகிறது. ஆட்டோஇம்யூன் நோய் என்றும் இதனை கூறுகின்றனர். சொந்த உடலே தனது நோய் எதிர்ப்பு திறனால் அதிகமாகத் தூண்டப்பட்டு ஆரோக்கியமான செல்களை தாக்கத் தொடங்குகிறது என்று இதனை பொருள் கொள்ளலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Advertisment
எனவே, இது போன்ற சரும பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. ஆனால், சில வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் சொரியாசிஸ் உள்ளிட்ட சரும நோய்கள் ஏற்படுவதை தடுக்க முடியும் என மருத்துவர் ஸ்வேதா ராணி க்ளர் வேதா ஆயுர் க்ளீனிக் தமிழ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில், சூரிய ஒளியில் இருக்கக் கூடிய வைட்டமின் டி, சருமத்தில் உள்ள செதில் தோல்களை குறைக்கிறது என மருத்துவர் ஸ்வேதா ராணி தெரிவித்துள்ளார். இதனால், உடலில் இருக்கும் வைட்டமின் டி அளவை 60-க்கு மேல் இருக்கும்படி, பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சொரியாசிஸ் அல்லது மற்ற வகையான சரும நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் 20 நிமிடங்கள் சூரிய ஒளி அவர்களது சருமத்தில் படும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர் ஸ்வேதா ராணி அறிவுறுத்துகிறார். இதன் மூலம் உடலில் இருக்கக் கூடிய வைட்டமின் டி அளவை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.
Advertisment
Advertisements
இது தவிர வைட்டமின் டி சத்துகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்ற பொருட்களை உணவாக எடுத்துக் கொள்ளுதல் மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் சருமம் தொடர்பான பிரச்சனைகள் உருவாவதை தடுக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
நன்றி - Clair Veda Ayur Clinic Tamil Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.