நின்னுக்கிட்டே இதை செய்யுங்கள்… தொப்பை ஈஸியா குறையும்; டாக்டர் வேணி

தொப்பையை குறைப்பதற்கும், உடல் கொழுப்பை எரிப்பதற்கும் உதவும் பயிற்சிகளை மருத்துவர் வேணி விளக்கமாக தெரிவித்துள்ளார். இதற்கான ஒவ்வொரு பயிற்சியையும் எப்படி செய்வது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தொப்பையை குறைப்பதற்கும், உடல் கொழுப்பை எரிப்பதற்கும் உதவும் பயிற்சிகளை மருத்துவர் வேணி விளக்கமாக தெரிவித்துள்ளார். இதற்கான ஒவ்வொரு பயிற்சியையும் எப்படி செய்வது என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Knee drive

உடல் எடையை குறைப்பதற்கு வீட்டில் இருந்தபடியே சில எளிமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளாலாம் என்று மருத்துவர் வேணி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இவற்றை எவ்வாறு செய்ய வேண்டும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisment

அதன்படி, நேராக நின்று கொண்டு இரு கால்களையும் சற்று அகன்ற நிலையில் வைத்திருக்க வேண்டும். இப்போது, இரண்டு கைகளையும் ஒன்றோடு ஒன்று கோர்த்துக் கொண்டு, ஒவ்வொரு முட்டியாக உயர்த்தி கைகளை தொட வேண்டும்.

அடுத்தபடியாக, ஒரு காலை மட்டும் பின்புறமாக நகர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். இனி, நகர்த்தி வைத்திருக்கும் கால் முட்டியை பயன்படுத்தி கைகளை தொட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு முட்டியையும், பயன்படுத்தி கைகளை தொட வேண்டும். குறிப்பாக, வலது காலை கொண்டு இடது கையையும், அதன் பின்னர், இடது கால் கொண்டு வலது கையையும் தொட வேண்டும்.

இதேபோல், மற்றொரு பயிற்சியையும் மேற்கொள்ளலாம். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, அதன் பின்னர் கைகளை கீழே இறக்கும் போது, அதன் நடுவே கால்கள் செல்லும் வகையில் கால்களை உயர்த்த வேண்டும். இந்தப் பயிற்சியையும் இரண்டு கால்களுக்கும் செய்ய வேண்டும்.

Advertisment
Advertisements

அடுத்ததாக, ஒரு கையை தலையில் வைத்து மற்றொரு கையை கொண்டு முட்டியை தொட வேண்டும். இதேபோல், இரண்டு கைகளுக்கும் மாற்றி மாற்றி பயிற்சி அளிக்க வேண்டும். இந்த பயிற்சிகள் அனைத்தையும் மூன்று செட்கள் வீதம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும்.

இது போன்று வீட்டிலேயே எளிமையாக உடற்பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. அந்த வகையில், கலோரிகள் எரிக்கப்படுவதால் உடல் எடையை குறைக்கவோ அல்லது கட்டுக்குள் வைக்கவோ முடியும். வீட்டு உடற்பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்தவும், உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும் உதவுகின்றன.

மேலும், உங்கள் வசதிக்கு ஏற்ற நேரத்தில், எந்த நேரத்திலும் உடற்பயிற்சி செய்யலாம். குறிப்பிட்ட நேர அட்டவணையை பின்பற்ற வேண்டியதில்லை. உங்கள் உடல் நிலை, இலக்குகள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப உடற்பயிற்சி திட்டத்தை வடிவமைக்கலாம்.  உங்களுக்கு ஏற்றவாறு உடற்பயிற்சியின் வகை, நேரம் மற்றும் தீவிரத்தை மாற்றியமைக்க முடியும்.

நன்றி - Neuro Doctor Tamil Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

exercising

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: