தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரைகள் சாப்பிட வேண்டுமா என்ற கேள்வி பலருக்கு இருக்கும். அதற்கான விளக்கத்தை மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் காலை நேரத்தில் மாத்திரை எடுத்துக் கொண்ட பின்னர் தான் காபி, டீ போன்றவற்றை கூட குடிக்க முடியும் என்று கூறுவார்கள். எனினும், இதற்காக மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக மருத்துவர் யோக வித்யா கூறியுள்ளார்.
குறிப்பாக, தலை முடி உதிர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, சில வழிமுறைகளை பின்பற்றினால் தைராய்டு பிரச்சனையில் இருந்து மீண்டு விடலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைத்துள்ளார்.
முதலாவதாக ஹிமாலயன் பிங்க் உப்பு பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இதில் தான் உண்மையான ஐயோடின் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இது தைராய்டு பிரச்சனைக்கு தீர்வளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்ததாக செலினியம் சத்துகள் நிறைந்த உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதற்காக ப்ரெசில் நட்ஸ் சாப்பிடலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார். இதேபோல், அசைவம் சாப்பிடுபவர்கள் oyster சாப்பிடலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடக் கூடாது உணவுகள் சில இருக்கிறது. அந்த வகையில், முட்டைகோஸ், காளிஃப்ளவர், ப்ரொக்கோளி ஆகிய காய்கறிகள் சாப்பிடுவதை தைராய்டு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்த்து விட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.