/indian-express-tamil/media/media_files/2025/05/13/3CBIQHmCJMVY3Mb7Vq1o.jpg)
குழந்தை பிறந்த பின்னர் சில பெண்களுக்கு வயிறு தொப்பையாக காணப்படும். இதற்காக உடற்பயிற்சி மற்றும் உணவு முறை மாற்றத்தை மேற்கொண்டாலும் பலன் அளிப்பதில்லை என்று சில பெண்கள் கூறுகின்றனர். அதன்படி, இந்த தொப்பையை எவ்வாறு சுலபமாக குறைக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
அதன்படி, குழந்தை பிறந்த பின்னர் கழிவுகள் அனைத்தும் வயிற்றில் இருந்து வெளியேறாமல் இருந்தால் இது போன்று வயிறு தொப்பையாக காணப்படும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கெட்ட வாயுக்கள் உள்ளே ஏற்படுவதன் காரணமாகவும் வயிறு இவ்வாறு காணப்படும் என்று அவர் கூறுகிறார்.
எனவே, குழந்தை பிறந்த பின்னர் கிழங்கு வகைகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்துகிறார். ஏனெனில், இதில் இருந்து உருவாகும் வாதம் வாயுத் தொல்லையை அதிகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது.
மேலும், சித்த மருத்துவத்தில் இதற்கென சில மருந்துகள் கொடுக்கப்படுவதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். அப்படி கொடுக்கும் போது மாதவிடாய் நேரத்தில் இந்தக் கழிவுகள் வெளியாகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலமாகவும் வயிறு குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். கூடுதலாக, யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலம் தொப்பையை குறைக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.