மாத்திரைகள் இன்றி இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை எவ்வாறு குறைக்கலாம் என மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கொலஸ்ட்ராலுக்காக தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் அவை ஞாபக மறதிக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
கொலஸ்ட்ரால் பிரச்சனைக்காக நீண்ட நாட்களுக்கு மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது அவை என்ன மாதிரியான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர் யோக வித்யா விவரித்துள்ளார்.
Advertisment
இரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் தொடர்ச்சியாக மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அதே சூழலில் வடை, பூரி போன்ற உணவு பொருட்களையும் சாப்பிட்டு வருவதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். உணவு முறை இவ்வாறு இருக்கும்பட்சத்தில் நீண்ட நாட்களுக்கு கொலஸ்ட்ரால் மாத்திரைகள் சாப்பிட வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்று அவர் கூறுகிறார்.
நீண்ட நாட்களுக்கு கொலஸ்ட்ரால் மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அவை ஞாபக மறதி பிரச்சனையை உருவாக்கக் கூடும் என்று மருத்துவர் யோக வித்யா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுவும் சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு இந்த பிரச்சனை வரும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் நமது உணவு முறை மற்றும் வாழ்க்கை முறைகள் மூலமாக தான் கொலஸ்ட்ரால் வருகிறது. அப்படி இருக்கும் போது கொலஸ்ட்ரால் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளாமல் உணவு முறைகளை மாற்றியமைத்து கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் என்று மருத்துவர் யோக வித்யா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
எனவே, எண்ணெய் அதிகமாக சேர்க்கப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதை கூடுமானவரை குறைத்து விட வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இப்படி செய்யும் போது, ஏற்கனவே இருக்கும் கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும். இது மட்டுமின்றி அன்றாட உணவில் எலுமிச்சை, இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் கருஞ்சீரகம் ஆகியவை இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம்.
இவை அனைத்தையும் தொடர்ந்து பின்பற்றினால் இயற்கையான முறையில் கொலஸ்ட்ரால் கரையத் தொடங்கும். மேலும், தினசரி சுமார் 1 மணி நேரம் நடைபயிற்சி செல்ல வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார்.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.