யூரின் போகும் போது எரிச்சல்? அப்ப இந்த பிரச்சனையா இருக்கும்? விளக்கும் டாக்டர் யோக வித்யா

சிறுநீரகத்தில் கல் உருவானால் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரச்சனையின் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

சிறுநீரகத்தில் கல் உருவானால் என்ன மாதிரியான அறிகுறிகள் ஏற்படும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரச்சனையின் ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள முடியும்.

author-image
WebDesk
New Update
Kidney stone issue

சிறுநீரகத்தில் கல் ஏற்படும் போது நம்முடைய அன்றாட பணிகளை செய்வதில் மிகுந்த சிரமம் ஏற்படும். இதனால், அதிகப்படியான வலியும் உருவாகும். அதன்படி, சிறுநீரகத்தில் கல் உருவாகும்பட்சத்தில், எந்த மாதிரியான அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment

அதன்படி, சிறுநீர் கழிக்கும் போது சிலருக்கு எரிச்சல் உருவாகும். இது போன்ற அறிகுறி தென்பட்டால் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதேபோல், சிலருக்கு முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாமல், சிறிது தடைபட்டு மீண்டும் கழிக்கும் நிலை உருவாகும்.

இந்தப் பிரச்சனையும் சிறுநீரக கல் பாதிப்பிற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். இது தவிர சிறுநீர் வெளியாகும் போது இரத்தமும் வெளியேறும் நிலை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

இதேபோல், நீண்ட நாட்களாக முதுகு வலி பாதிப்பு இருந்தாலும், அதனை அலட்சியமாக விடக் கூடாது. ஏனெனில், சிலருக்கு சிறுநீரக கல் பாதிப்பின் அறிகுறியாக முதுகு வலி ஏற்படும். இது தவிர காரணமின்றி அடிக்கடி வாந்தி எடுப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலும், சிறுநீரக கல்லின் அறிகுறியாக இருக்கக் கூடும்.

Advertisment
Advertisements

எனவே, இது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிறுநீரக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மேலும், தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Tips to keep your kidneys healthy

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: