தினமும் சுய இன்பம்... பக்க விளைவுகள் இருக்கா? விளக்கும் டாக்டர் யோக வித்யா
ஆண்களிடையே அதிகரித்திருக்கும் சுய இன்பம் பழக்கம் தொடர்பாக மருத்துவர் யோக வித்யா பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
ஆண்களிடையே அதிகரித்திருக்கும் சுய இன்பம் பழக்கம் தொடர்பாக மருத்துவர் யோக வித்யா பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
சுய இன்பம் பழக்கத்தை அதிகமான ஆண்கள் செய்வதாக கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற சந்தேகம் ஆண்களுக்கு ஏற்படுகிறது. இதற்கான விளக்கத்தை மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
Advertisment
பெண்களை ஒப்பிடும் போது ஆண்களிடம் சுய இன்பம் பழக்கம் சாதாரணமாக இருப்பதாக மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். குறிப்பாக, திருமணத்திற்கு முன்பாக சுய இன்பம் பழக்கத்தின் மூலமாக ஆண்கள் தங்களை திருப்திபடுத்திக் கொள்கின்றனர் என்று அவர் கூறுகிறார்.
இப்படி செய்யும் போது ஆண்களுக்கு சுமார் 3 நிமிடங்களுக்குள் உச்சநிலை ஏற்படுகிறது. இதனால், மற்றவர்களின் உதவி தங்களுக்கு தேவை இல்லை என்ற ஒரு நிலைக்கு ஆண்கள் செல்கின்றனர். இது திருமணத்திற்கு பின்பாக ஆண்களின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிக்கிறது என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.
சுய இன்பம் செய்த பின்னர் ஆண்களுக்கு டோபமைன் என்ற ஹார்மோன் வெளியாகிறது. நீண்ட நேர உடற்பயிற்சி போன்றவை செய்த பின்னர் ஏற்படும் இந்த நிலை, சுமார் 3 நிமிடங்களுக்குள்ளாகவே உருவாகிறது. இப்படி இருப்பதனால் தினசரி சுய இன்பம் செய்ய வேண்டும் என்று ஆண்களுக்கு தோன்றுகிறது.
Advertisment
Advertisements
இதனால் தங்கள் இணையுடன் சேர்ந்து தாம்பத்தியத்தில் ஈடுபடுவதில் தங்களுக்கு திருப்தி அளிப்பதில்லை என்று ஆண்கள் கருதுகின்றனர். இதேபோல், சுய இன்பத்தை ஒரு அளவிற்கு மேல் அதிகமாக செய்யும் போது தாம்பத்தியத்தில் ஈடுபாடு இல்லாமல் போய் விடும்.
இது மட்டுமின்றி தினசரி சுய இன்பத்தை அதிகமாக செய்யும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறோம் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். எனவே, இத்தகைய பக்கவிளைவுகள் அனைத்தும் சுய இன்பம் அதிகமாக செய்யும் போது உருவாகிறது.
நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.