முகப்பரு பிரச்சனையா? வீட்டில் இருந்தபடி நீங்களே சரி செய்யலாம்… இதை டிரை பண்ணுங்க; டாக்டர் யோக வித்யா

முகப்பரு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முகப்பரு ஏற்படுவதற்கான பல்வேறு காரணங்களை மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். மேலும், இதனை வீட்டு வைத்திய முறையில் எவ்வாறு குணப்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Pimple remedies

குறிப்பிட்ட வயது வரை சிலருக்கு முகத்தில் பருக்கள் வரும். பதின் பருவத்தில் இருப்பவர்களுக்கு முகத்தில் அடிக்கடி பருக்கள் தோன்றுவது இயல்பு தான். அதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், சிலருக்கு எப்போதுமே முகத்தில் பருக்கள் வரும். இதற்கான காரணத்தை மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

Advertisment

பொடுகு தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடிக்கடி முகத்தில் பருக்கள் வரும். இது தவிர உடல் உஷ்ணம் அதிகமாக இருந்தாலும் முகத்தில் பருக்கள் வரும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார். பெண்களை பொறுத்தவரை, பி.சி.ஓ.எஸ் பாதிப்பு இருந்தாலும் முகத்தில் பருக்கள் ஏற்படலாம்.

அந்த வகையில் பொடுகு தொல்லையால் முகப்பருக்கள் ஏற்பட்டால், பொடுதலை தைலத்தை தலைக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் பொடுகு நீங்கி விடும். முகப்பருக்களும் மறையத் தொடங்கும். இந்த தைலத்தை நாட்டு மருந்து கடைகளில் இருந்து வாங்கலாம்.

பி.சி.ஓ.எஸ் பாதிப்பால் முகப்பரு வந்தால், அவர்களுக்கு கல்லீரலை பலப்படுத்தும் மருந்துகள் கொடுக்கப்படும் என்று மருத்துவர் யோக வித்யா குறிப்பிடுகிறார். இதற்காக தொடர்ந்து 40 நாட்களுக்கு கீழாநெல்லி சாறு மற்றும் மோர் குடிக்கலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.

Advertisment
Advertisements

உடல் உஷ்ணம் காரணமாக முகத்தில் பருக்கள் வரும் போது, வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம் என்று மருத்துவர் யோக வித்யா பரிந்துரைக்கிறார். இவ்வாறு குளிக்கும் போது உடல் சூடு தணியும். இதனால் முகப்பருக்களும் மறையத் தொடங்கும்.

இது தவிர சிறிதளவு உப்பை தண்ணீரில் கரைத்து, முகத்தில் பருக்கள் இருக்கும் இடங்களில் தடவலாம் என்று மருத்துவர் யோக வித்யா கூறுகிறார். இவ்வாறு செய்தால் பருக்கள் நீங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Simple tips to get pimple free skin in days

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: