ஆண்களின் விந்தணுக்கள் குறைய காரணம் இதுதான்… உணவில் இந்த சுவைகளை குறையுங்க; டாக்டர் யோக வித்யா

ஆண்களின் விந்தணுக்கள் குறைவதற்கான முக்கிய காரணங்களை மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

ஆண்களின் விந்தணுக்கள் குறைவதற்கான முக்கிய காரணங்களை மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார். மேலும், இதனை அதிகரிப்பதற்கான வழிமுறைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Sperm test

இன்றைய சூழலில் பல ஆண்களிடம் விந்தணுக்கள் குறைபாடு காணப்படுகிறது. இதற்கான காரணம் மற்றும் இதனை கட்டுப்படுத்துவதற்கான சில வழிமுறைகள் குறித்து மருத்துவர் யோக வித்யா குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

அதிகப்படியாக, காரம் மற்றும் புளிப்பு சுவை நிறைந்த உணவுகள் சாப்பிடுவதும் ஆண்மைக் குறைவை ஏற்படுத்தலாம் என மருத்துவர் யோகா வித்யா தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக உணவில் இயற்கையான இனிப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலம் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

இதேபோல், உடல் வெப்பம் அதிகரிப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், அதிகமாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருப்பது, விதைப்பைகள் வீக்கம் போன்றவற்றால் ஆண்மைக் குறைவு ஏற்படலாம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஜீன்ஸ் பேன்ட் போன்ற இறுக்கமான ஆடைகள் உடுத்துவதும் ஆண்மைக் குறைவிற்கு காரணமாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். 

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடலைக் குளிர்விக்கும் உணவுகளை சாப்பிடாவிட்டால், அவை ஆண்மைக் குறைவிற்கு வழிவகுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இரவு நேர பணியில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment
Advertisements

எனவே, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் இதனை சரி செய்யலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பது, குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது, காட்டன் ஆடைகளை உடுத்துவது, செல்போனை நீண்ட நேரம் பேன்ட் பாக்கெட்டில் வைத்து பயன்படுத்தாதது ஆகியவற்றை கடைபிடிக்கலாம் என அவர் பரிந்துரைத்துள்ளார்.

சின்க் சத்துகள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செவ்வாழைப்பழம், ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றையும் சாப்பிடலாம் என மருத்துவர் யோகா வித்யா தெரிவித்துள்ளார். மேலும், பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசனை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது போன்ற விஷயங்களை கடைபிடிப்பதன் மூலம் விந்தணுக்கள் தொடர்பான பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும் என்று மருத்துவர் யோக வித்யா தெரிவித்துள்ளார்.

நன்றி - EthnicHealthCare Dr.B.YogaVidhya Youtube Channel

 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Sexual Harassment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: