கோவை மாவட்டத்தில், இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கோவை நுரையீரல்
ல் மருத்துவர்கள் சங்கம் சார்பாக, மாநகராட்சி ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், ஆட்டோ ஒட்டுநர்கள் உள்ளிட்ட பலருக்கு இலவசமாக நுரையீரல்
பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், நுரையீறல் விழிப்புணர்வு குறித்து பிரச்சாரம் நடத்தப்பட்டது.
அதன்பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவர்கள், புகைப்பிடிப்பதால் மட்டும் நுரையீறல் பாதிப்பு ஏற்படாது எனவும், கடந்த ஆறு ஆண்டுகளாக அதிகளவில் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதன் மூலமாகவும் பெரும்பாலான நுரையீறல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், பொதுமக்கள் அனைவரும் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்திய மருத்துவர்கள், இதன் மூலம் பாதிப்பு இருந்தால் அதனை ஆரம்ப நிலையிலேயே அறிந்து கொள்ளலாமெனக் கூறினர்.
நுரையீரல் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்று வாரங்களுக்கு தொடர்ச்சியாக இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனை ஏற்படும் எனவும், அதற்கு ஏற்றார் போல் கண்டறியப்பட்டு சிகிச்சை செய்யப்படுமெனவும் தெரிவித்தனர்.
நுரையீரல் நோய்களுக்கான தேசிய மாநாடு அடுத்த மாதம் 21-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை கோவையில் நடைபெறவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில், 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், பேச்சாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் இருந்து 100-க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற நிபுணர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாடு 21 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொற்று நோய்க்கு பிந்தய காலத்தில் சுவாச பிரச்சனைகள் அதிகரித்துக் காணப்படுவதாகவும், அதற்கு மோசமான சூற்றுச் சூழல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களும் வழிவகுப்பதாகக் கூறிய மருத்துவர்கள், அது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் செய்து வருவதாக தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“