அக்கி நோய்த்தொற்றை மீண்டும் செயல்படுத்துவதில் இருந்து முடி உதிர்தல் வரை, குணமடையும் கட்டத்தில் உள்ள பல கோவிட் நோயாளிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தோல் பிரச்னையை அல்லது மற்ற பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
டெல்லி, மும்பை மற்றும் பிற நகரங்களில் உள்ள முன்னணி மருத்துவமனைகளில் உள்ள தோல் பராமரிப்பு நிபுணர்கள், மருத்துவமனைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னரும் அல்லது வீட்டு குவாரண்டைன் காலத்தை முடித்த பிறகும் கொரோனா வைரஸ் நோயாளிகள் எந்தவொரு தோல் அழற்சி பிரச்னையையும் கவனிக்க வேண்டும் அல்லது அந்த பிரச்னை கட்டுப்பாடில்லாமல் வளர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டனர்.
டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைகளின் தோல் மருத்துவத்தில் மூத்த ஆலோசகர் டாக்டர் டி.எம். மகாஜன் கூறுகையில், தோல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பல கோவிட்டுக்கு பிந்தைய நோயாளிகள் புறநோயாளிகளாக வருகிறார்கள். அவர்கள் தாங்கள் மியூகோர்மைகோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அஞ்சுகிறார்கள். ஆனால், மக்கள் குழப்பமாக இருக்கக்கூடாது.
“குணமடையும் கட்டத்தில் பல கோவிட் நோயாளிகள் தோல் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இதில் எங்களுக்கு மிகவும் பொதுவான ஒரு விஷயம் அக்கி நோய்கள். அக்கி நோய் வரலாற்றைக் கொண்ட பல நோயாளிகளில் இது மீண்டும் தூண்டப்படுகிறது. மற்றவர்களில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் புதிதாக தொடர்கிறது” என்று டாக்டர் மகாஜன் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
தோல்நோய் வகை அக்கி (herpes simplex) வைரஸ் தொற்று, பொதுவாக அக்கி (herpes) என அழைக்கப்படுகிறது. இதற்கு ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 1 (HSV-1) அல்லது ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் வகை 2 (HSV-2) காரணமாக இருக்கலாம். ஹெர்பெஸ் லேபியாலிஸ் எச்.எஸ்.வி எரியும் வலியுடன் கொத்தாக புண்களுடன் உதடு பகுதியைச் சுற்றி ஏற்படும்.
அக்கி அம்மை (Herpes zoster) என்பது வைரஸ் தொற்று ஆகும். இது சின்னம்மை வைரஸை (varicella-zoster virus) மீண்டும் செயல்படுத்துவதன் மூலம் ஏற்படுகிறது. இது பொதுவாக ஒரு வலிநிறைந்த ஆனால் வரையறுக்கப்பட்ட தோல் சொறி சிறங்கு ஆகும்.
எச்.எஸ்.வி-யில் இருந்து அக்கி நோயைக் காட்டிலும் அக்கி அம்மை நொய்கள் அதிகம் பதிவாகின்றன என்று கோவிட் பிந்தைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
குணமடையும் கட்டத்தில் இருக்கும் கோவிட் நோயாளிகளிடையே கேண்டிடா பூஞ்சை தொற்று நோய்கள் காணப்படுகின்றன என்று மகாஜன் கூறினார். இது ஒரு அச்சு போன்ற தொற்று மற்றும் அதிகப்படியான மருந்து அல்லது ஸ்டெராய்டுகளின் பயன்பாட்டின் விளைவாக ஏற்படலாம். இந்த தொற்று பிறப்புறுப்பில் வெள்ளை திட்டுகளை ஏற்படுத்தும்.
கேண்டிடியாஸிஸ் என்பது கேண்டிடா எனப்படும் ஈஸ்ட் (ஒரு வகை பூஞ்சை) காரணமாக ஏற்படும் பூஞ்சை தொற்று ஆகும்.
மும்பையைச் சேர்ந்த தோல் மருத்துவரும் முடி மாற்று அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் சோனாலி கோஹ்லி கூறுகையில், கோவிட் -19 ஒரு நோயாளியின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் மட்டுப்படுத்தச் செய்கிறது. அது தோல், முடி மற்றும் நகங்கள் உள்ளிட்டவை தொடர்பான பல பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.
“இரண்டையும் தொடர்புபடுத்த மருத்துவ ஆய்வு எதுவும் இல்லை என்றாலும் ஒரு மாதத்திற்குப் பிறகும் குணமடையும் கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான கோவிட் நோயாளிகளுக்கு அக்கி அம்மை தொற்று இருப்பதாகக் கூறப்படுகிறது. முடி உதிர்தல் மற்றும் நகங்கள் பிரச்னைகள் தவிர பல நோயாளிகளுக்கும் நடந்திருக்கிறது”என்று அவர் கூறினார்.
நகம் பிரச்னைகளைப் பொருத்தவரை, இதுபோன்ற நோயாளிகளில் மெலனோனிச்சியா அல்லது பியூவின் கோடுகள் காணப்படுகின்றன. மெலனோனிச்சியா நகங்களில் வெண்மை அல்லது பழுப்பு நிற கோடுகளை ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார்.
முடி உதிர்தல் தொடர்ந்தால் நோயாளிகள் ஒரு நிபுணரை அணுக வேண்டும் என்று மும்பையில் உள்ள சர் எச் என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆலோசகர் தோல் மருத்துவர் கோஹ்லி கூறினார்.
ஏப்ரல் மாதம் கோவிட் தொற்றில் இருந்து மீண்டு வரும் டெல்லியைச் சேர்ந்த 24 வயதான நிகிதா குமார், “குணமான ஆரம்ப நாட்களில் தான் ஏராளமான முடி உதிர்வை சந்தித்ததாகக்” கூறினார்.
“நான் ஒரு சீரம் பரிந்துரைத்த ஒரு தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றேன். ஓரிரு மாதங்களில் அது குறையும் என்று அவர் கூறியிருந்தார். மேலும், கோவிட்டுக்கு பிந்தைய பிரச்னைகளைப் பற்றி ஆன்லைனில் படிக்கும்போது, ஒரு பிரபல பாலிவுட் நடிகையும் கோவிட்டுக்குப் பிறகு முடி உதிர்வு ஏற்பட்டதாக நான் கண்டறிந்தேன்” என்று அவர் கூறினார்.
ஃபோர்டிஸ் மருத்துவமனையின் தோல் மருத்துவ மூத்த ஆலோசகர் டாக்டர் நிதி ரோஹ்தகி, வசந்த் கஞ்ச் கூறுகையில், கோவிட்டுக்கு பிந்தைய முடி உதிர்தல் பெண்களில் அதிகமாக காணப்படுகிறது.
“சிகிச்சையின் போது நோயாளிகள் தோல் பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள், குணமடையும்போது இன்னும் ஒருவித வீக்கம் அல்லது நெற்றியில் அல்லது முதுகில் புள்ளிகளை வெளிப்படுத்தக்கூடும். ஆனால், பல முறை இவை எளிதாகவும் கட்டுப்படுத்தும் அளவில் தடிப்புகள் இருக்கின்றன. அவை உரிய மருந்தைப் பயன்படுத்தியதற்குப் பிறகு நேரத்தில் குறையும்” என்று அவர் கூறினார்.
ஆனால், கோவிட் பிந்தைய நோயாளிகள் தோலில் ஏற்படும் அழற்சிகள் மற்றும் எரிச்சலை கவனிக்க வேண்டும். அது அதிகரித்து வலி அல்லது கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தினால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று ரோஹ்தகி கூறினார்.
“அத்தகைய நோயாளிகளில் காணப்படும் மற்ற தோல் தொற்று கருப்பு திட்டுகளை உடலின் சில பகுதிகளில் ஒரு சிறிய தொற்றாக ஏற்படுகிறது. அதைச் சுற்றி சிறைய திட்டுகள் இருக்கின்றன” என்று அவர் கூறினார்.
சில நோயாளிகளில், ‘கோவிட் கால்விரல்கள்’ நோய்கள் காணப்படுகின்றன. இதில் கால்விரல் மற்றும் அண்டை கால்விரலில் புண் அல்லது செல்களின் இறப்பு ஏற்படுகிறது என்று மருத்துவர் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.