இன்றைய சூழலில் பலரும் கணினி மற்றும் செல்போன்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம். இதனை குறைப்பது என்பது தற்போது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இதனை அதிகமாக பயன்படுத்துவதால் கருவளையம் உருவாகும் என்று மருத்துவர் மோனிஷா தெரிவித்துள்ளார்.
Advertisment
இதேபோல், தூக்கமின்மை மற்றும் இரவு நேர பணி ஆகியவையும் கருவளையம் வருவதற்கு காரணமாக அமையும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஆனால், இவை அனைத்தையும் நம்மால் பெரிதும் தவிர்க்க முடியாது. எனினும், கருவளையத்தை தடுப்பதற்கான முறையை மருத்துவர் மோனிஷா பரிந்துரைத்துள்ளார்.
அந்த வகையில், அதிக நேரம் கணினி அல்லது செல்போன் பயன்படுத்த வேண்டிய நிர்பந்தம் இருப்பவர்கள் ப்ளூ லைட் ப்ரோடக்டர் கண்ணாடிகளை பயன்படுத்தலாம். இதேபோல், நீண்ட நேரம் பயணம் செய்பவர்கள் சன்கிளாஸ் போடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
இது தவிர கண்களைச் சுற்றி இருக்கும் பகுதி வறட்சியாக இருந்தாலும் கருவளையம் உருவாகும். இதனை தடுப்பதற்கு மாய்ஸ்சரைசர் பயன்படுத்த வேண்டும். இதேபோல், இரவு தூங்குவதற்கு முன்பாக Under Eye Cream பயன்படுத்தலாம் என்று மருத்துவர் மோனிஷா அறிவுறுத்துகிறார்.
Advertisment
Advertisements
இது கண்களை சுற்றி இருக்கும் இடங்களை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். மேலும், கருவளையம் பாதிப்பை குறைக்கவும் இது பயன்படுகிறது. இவ்வாறு வாங்கும் Under Eye Cream-களில் கேஃபைன், வைட்டமின் கே, ரெட்டினால் அல்லது பெப்டைட் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இதனை சுமார் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு பயன்படுத்தியும் பலன் அளிக்கவில்லை என்றால் சருமம் சார்ந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும் என அவர் வலியுறுத்துகிறார். இதன் மூலம் கருவளையத்திற்கான காரணத்தை கண்டறிந்து அடுத்தகட்ட சிகிச்சையை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
நன்றி - Dr. Monisha Aravind Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.