/tamil-ie/media/media_files/uploads/2021/11/liqour.jpg)
மதுப்பழக்கம் நம்பகத்தன்மை இல்லாத பல கட்டுக்கதைகள் மற்றும் அனுமானங்களுடன் தொடர்புடையது. அதில் பிரபலமான ஒன்று, இது உங்கள் எடையை கணிசமாக அதிகரிக்கச் செய்கிறது. இந்த கேள்விக்கு ஊட்டச்சத்து நிபுணர் புவன் ரஸ்தோகி இன்ஸ்டாகிராமில் பதில் அளித்தார். அத்துடன் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதற்கான வழிகளையும் அவர் பரிந்துரைத்தார்.
அளவாக எடுத்துக் கொள்ளப்படும் மது “எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்காது, எடை குறைப்பை தடுக்காது, அல்லது பசியை அதிகரிக்காது. ஆனால், அதிகப்படியான நுகர்வு, அதிக பசி மற்றும் குறைவான தசை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மது உட்கொள்வது வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
மது அருந்துவது பெரிய அளவில் அலர்ஜியை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக சர்க்கரை மற்றும் கார்பனேற்றப்பட்ட பானங்கள் போன்ற வாயுவை ஏற்படுத்தும் உணவுகளுடன் இணைந்திருப்பதால் இன்னும் மோசமாகிறது. மது அருந்துவதால் முகம் வீக்கமடைகிறது.
ஆல்கஹால் டையூரிடிக் என்பதால், அது உடலை நீரிழப்பு செய்கிறது. நாம் நீரிழப்புடன் இருக்கும் போது, தோல் மற்றும் உறுப்புகள் தண்ணீரை பிடித்துக்கொள்ள முயற்சி செய்கின்றன. ஆல்கஹால் அருந்துவதால் முகம் மற்றும் உடல் புடைப்பாக மாற இதுதான் காரணம். மதுவை அதிகமாக உட்கொள்வது, அதிக பசியின்மை மற்றும் குறைவான தசை வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்று ஊட்டச்சத்து நிபுணர் ஒப்புக்கொண்டார்.
நாளுக்கு ஒரு யூனிட் என வாரத்தில் 5 நாட்கள் மது அருந்தும்போது, அந்த நாளில் கலோரிகள் மற்றும் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வது அவசியம். மது அருந்தும் சில பொதுவான புள்ளி விவரங்கள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளார்.
½ pint 4% பீர் (250 ml)
*100 மிலி of 12% வைன்
*25 மிலி of 40% விஸ்கி
ஒருவர் எப்போதாவது குடிக்கிறார் என்றாலும், எச்சரிக்கையுடன் செயல்படுவது மிகவும் முக்கியம். ஆல்கஹால் ஆராய்ச்சி: தற்போதைய மதிப்புரைகள், (Alcohol Research: Current Reviews) இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, நீங்கள் அதிகமாக மது அருந்தும்போது, உங்கள் உடலின் நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், திசுக்களின் காயங்களிலிருந்து மீள்வதற்கும் வழிவகுக்கும் நோய் எதிர்ப்பு பாதையை சீர்குலைக்கும் அபாயம் உள்ளது.
குடிப்பழக்கத்தின் விளைவுகளை எதிர்த்துப் போராடும் வழிகள் என்ன?
மது அருந்தும்போது பரிந்துரைக்கப்டும் வரம்புகளுக்கு அப்பால் அதிகளவு நீர் உட்கொள்ள வேண்டும்.
இரைப்பை பிரச்சினைகள் பொதுவானது. அதனால், சர்க்கரை மற்றும் கார்பனேற்றப்பட்ட சேர்க்கைகளை குறைக்கவும்.
உட்கொள்ளும் காலத்தை அதிகரிப்பது, ஒரு யூனிட் நேரத்திற்கு ஆல்கஹாலை ஜீரணிக்க, உடலுக்கு குறைந்த திறனே உள்ளது.
நீங்கள் தொடர்ந்து மது அருந்துபவராக இருந்தால், நீண்ட கால ஆரோக்கியத்திற்கு ஒரு நாளைக்கு 1-2 யூனிட் அளவுடன் நிறுத்துங்கள்.
நாள் ஒன்றுக்கு 1 யூனிட் என வாரத்தில் 4-5 நாட்கள் இருப்பது உங்கள் ஆரோக்கிய நலன்களை பாதிக்காது.
முக்கியமாக போதுமான தண்ணீர் உட்கொள்வது வீக்கம் மற்றும் நீரிழப்பில் இருந்து விடைபெறுவதற்கான மந்திரமாகும். ஆனால் மறுநாள் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இருப்பினும் ஒருவேளை மட்டும் உண்பது பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. நாள் முழுவதும் நீங்கள் என்ன எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதும் இருக்கிறது. எனவே நாள் முழுவதும் சீரான உணவுத் திட்டத்தை வைத்திருப்பது முக்கியம்.
இரைப்பை பிரச்சினைகள் இருந்தால், அதிகளவு தண்ணீர் உட்கொள்ளல் தொடங்கவும், அதேசமயம் இரைப்பை பிரச்சினைகளை மோசமாக்கும் உணவுகளை தவிர்க்கவும் என ஊட்டச்சத்து நிபுணர் புவன் ரஸ்தோகி கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.