சாப்பிட்ட உடனே சுகர் ஏறுதா? ஜப்பான் ஆராய்ச்சி சொல்லும் இந்த இலையில் டீ குடிங்க; டாக்டர் கார்த்திகேயன்
கொய்யா இலையின் மருத்துவ பயன்கள் என்ன? மாதவிடாய் வலி பிரச்னை முதல் முகப்பரு வரை அனைத்திற்கும் தீர்வாக அமைகிறது கொய்யா இலை டீ. ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வைக்கிறது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
கொய்யா இலையின் மருத்துவ பயன்கள் என்ன? மாதவிடாய் வலி பிரச்னை முதல் முகப்பரு வரை அனைத்திற்கும் தீர்வாக அமைகிறது கொய்யா இலை டீ. ரத்தத்தில் சர்க்கரை அளவும் கட்டுக்குள் வைக்கிறது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
கொய்யா இலையில் புரதம், வைட்டமின்கள் பி 6, கோலைன், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம் போன்ற சத்துகளும், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள், ஆன்டி-பாக்டீரியல் போன்றவை இருக்கிறது. கொய்யா இலை துவர்ப்பு சுவை உடையது.
Advertisment
கொய்யா இலையின் மருத்துவ பயன்கள்:
1. மாதவிடாய் வலி பிரச்னை தீரும்
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வலி ஏற்படும்போது, கொய்யா இலைக சாறு சாப்பிடுவதால், வலியின் தன்மை குறைகிறது மருத்துவ ஆராய்ச்சியில் தெரியவருகிறது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன். 3 மாதத்திற்கு முன்பு, தினசரி 6 மில்லிகிராம் கொய்யா இலை சாறு அருந்திய பெண்களுக்கு 3 மாத முடிவில் மாதவிடாய் வலி தன்மை 8.2 என்ற அளவில் இருந்து 7.2, 6.2 ஆக குறைவது தெரியவந்தது. வலி மாத்திரைகளை விட நல்ல ரிசல்ட் கிடைக்கும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
Advertisment
Advertisements
2.இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும்
கொய்யா இலைகளை வைத்து மனிதர்களிடம் ஜப்பானில் நடத்தப்பட்ட சிடியம் கோவா என்ற ஆராய்ச்சியில், ரத்தத்தில் சர்க்கரை அளவு 10% குறைவது தெரியவந்தது. சர்க்கரை நோய் வராமல் தடுப்பதில் கொய்யா இலைகள் முக்கிய பங்காற்றுகின்றன.
3. ரத்த கொதிப்பு அளவை கட்டுப்படுத்தும்
கொய்யா இலைகள் ரத்த கொதிப்பு அளவை கட்டுப்படுத்துகின்றன. 120 மனிதர்களிடம் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் பி.பி. அளவு 8 முதல் 9 புள்ளிகள் குறைவது கண்டிபிடிக்கப்பட்டது.மேலும் உடலில் இருக்கக் கூடிய கெட்டக் கொழுப்புகளை 10% அளவிற்கு கொய்யா இலைகள் குறைத்து நல்ல கொழுப்புகளை 8% அதிகரிக்கிறது என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
4. ஜீரண சக்தி - கொய்யா இலையில் நார்ச்சத்து
உடலில் உள்ள ஜீரண உறுப்புகளுக்கு கொய்யா இலையில் உள்ள நார்ச் சத்து நல்லது. மலச்சிக்கல், அஜீர பிரச்னை உள்ளவர்களுக்கு கொய்யா இலைகள் சாப்பிட அறிவுறுத்துகிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
5. புற்றுநோய் உண்டாக்கும் செல்களை தடுக்கும்
கொய்யா இலைகள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களை தடுக்கும் அல்லது அதன் வளர்ச்சியை 4 மடங்கு கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. முகப்பரு போன்ற பிரச்னைகளுக்கும் தீர்வாக அமைகிறது கொய்யா இலை. முகப்பரு ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைத் தடுத்து முகம் பொலிவு பெற செய்யும் என்கிறார் மருத்துவர் கார்த்திகேயன்.
பொறுப்பு துறப்பு:இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.