நாம் முகத்திற்கு மேக் அப் பயன்படுத்துவதால், பாதிப்பு அல்லது சருமத்தில் சேதம் ஏற்படும் என்று கூறப்படுவது உண்மைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது தொடர்பாக பிபலங்களின் தோல் மருத்து நிபுணர் கூறுகையில், ” முகத்திற்கு மேக் அப் போட பயன்படுத்தும் ஸ்பாஞ்சை நாம் மாற்ற வேண்டும் அல்லது அதை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்வது என்றால் அதை சோப்பு கலந்த நீரில் கழுவுவது மட்டும் அல்ல. ஸ்பாஞ்சினுள் பேக்டீரியா இருக்கும். இதனால் நாம் நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும் புதிய ஸ்பாஞ்சை வாங்குவதற்கு ரூ.300 மட்டுமே செல்வாகும். ஆனால் நம்மில் பலர் பிரஷ்யை பயன்படுத்துகிறார்கள். பிரஷ் பயன்படுத்தினால் உங்கள் சருமம் அதிகமாக சேதமாகும்.
மேலும் பயன்படுத்தும் மேக் அப் பொருட்கள் எப்போது காலாவதி ஆகிறது என்பதை பார்க்க வேண்டும். நமக்கு தெரியாமல் காலாவதி ஆன பொருட்களை நாம் பயன்படுத்தும் தவறை செய்யலாம்.
மேலும் மேக் அப் உடன் அதிக நேரம் இருக்கக்கூடாது. உங்களது சருமத்தின் தன்மையை புரிந்துகொள்ள வேண்டும். எண்ணெய் வழியும் சருமத்தில் தண்ணீர் அடிப்படையாக கொண்ட அல்லது பவுடர் அடிப்படையாக கொண்ட மேக் அப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இதுவே வரண்ட சருமம் உள்ளவர்கள், எண்ணெய் தன்மை உள்ள மேக் ஆப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இதுபோல கண்கள், உதடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மேக் அப் பொருட்களை பயன்படுத்தலாம். நமது முகம் மற்றும் சருமத்தை அப்படியே விட்டுவிடலாம் இதனால், நமது சருமம் நன்றாக சுவாசிக்கும்.
மேலும் ’Tinted’ சன்ஸ்கிரீன் மற்றும் பிபி க்ரீம்ஸ் பயன்படுத்தினால் நமக்கு மேக் அப் போட்டது போல ஒரு லுக் கிடைக்கும். இதனால் நாம் அதிகமாக மேக் ஆப் பயன்படுத்த வேண்டாம்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“