/indian-express-tamil/media/media_files/2025/04/22/6coP8xIaLAygeIs2rdna.jpg)
பப்பாளி பழம் சாப்பிட்டால் கரு கலையும் என்று பலரும் கூறுவதை கேட்டிருப்போம். இந்தக் கூற்றை சில புத்தகங்கள், திரைப்படங்களில் கூட நாம் கண்டிருப்போம். ஆனால், பப்பாளி பழம் சாப்பிடுவதன் மூலம் கரு எவ்வாறு கலையும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும்.
அதேபோல், இவ்வாறு கூறும் தகவல்களில் உண்மைத் தன்மை இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. அந்த வகையில் இதற்கான பதிலை மருத்துவர் கௌரி மீனா தெரிவித்துள்ளார். இதற்கான அறிவியல்பூர்வ விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
நன்றாக பழுத்த பப்பாளி பழத்தை சாப்பிடும் போது எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது என்று மருத்துவர் கௌரி மீனா தெரிவித்துள்ளார். அதேவேளையில், காயாக இருக்கும் பப்பாளியை வெட்டும் போது அதில் இருந்து பால் போன்ற திரவம் வெளியாகும்.
இந்த பால் போன்ற திரவத்தில் இருக்கும் வேதிப்பொருள், கர்ப்பபைக்கு சுருங்கி விரியும் தன்மையை கொடுக்கும் என்று மருத்துவர் கௌரி மீனா கூறுகிறார். இப்படி ஒரு நிலை ஏற்படும் போது, சில சமயங்களில் கரு கலைவதற்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், காயாக இருக்கும் பப்பாளியை யாரும் சாப்பிடுவதில்லை என்று மருத்துவர் கௌரி மீனா கூறியுள்ளார். அதே சமயம் பப்பாளி பழத்தில் நிறைய வைட்டமின்கள் இருப்பதால், அதனை தாராளமாக சாப்பிடலாம் என்று அவர் அறிவுறுத்துகிறார்.
எனினும், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது உடல்நிலை குறித்து பரிசோதிக்கும் மருத்துவரின் அறிவுரையை பெற்று எந்த விதமான உணவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில், ஒவ்வொருவரின் உடல் ஆரோக்கியமும் வெவ்வேறு விதமாக இருப்பதால், இது போன்ற தேவையற்ற சிக்கல்களை தவிர்க்கக் கூடும்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.