பெர்ஃப்யூம் யூஸ் பண்ணா ஆண்மை குறைவு? எச்சரிக்கும் டாக்டர் விஜி
பாடி ஸ்ப்ரேயைப் பயன்படுத்துபவர்கள், நேரடியாக சருமத்தில் (Directly on Skin) தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, உங்கள் ஆடைகளின் மீது (On Clothes) தெளிப்பதன் மூலம் ரசாயனங்கள் சருமத்துடன் நேரடித் தொடர்புக்கு வருவதைத் தடுக்கலாம்.
பாடி ஸ்ப்ரேயைப் பயன்படுத்துபவர்கள், நேரடியாக சருமத்தில் (Directly on Skin) தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, உங்கள் ஆடைகளின் மீது (On Clothes) தெளிப்பதன் மூலம் ரசாயனங்கள் சருமத்துடன் நேரடித் தொடர்புக்கு வருவதைத் தடுக்கலாம்.
பெர்ஃப்யூம் யூஸ் பண்ணா ஆண்மை குறைவு? எச்சரிக்கும் டாக்டர் விஜி
பாடி ஸ்ப்ரே (Body Spray) பெரும்பாலானோர் அன்றாடம் பயன்படுத்தும் பொருள். புத்துணர்ச்சி அளிக்கும், வாசனை தரும் என்ற நம்பிக்கையில் பயன்படுத்தும் இந்த ஸ்ப்ரே, நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயனங்களை கொண்டிருக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. குறிப்பாக, பாடி ஸ்ப்ரே பயன்பாடு ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Advertisment
ஆண்களின் ஆரோக்கியத்திற்கு ஆபத்து:
பாடி ஸ்ப்ரேயில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் 'பாரபின்' (Paraben) மற்றும் 'ஃபாலட்ஸ்' (Phthalates) போன்ற ரசாயனங்கள் ஆண்களின் உடல் நலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைகின்றன. இந்த ரசாயனங்கள், ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) ஹார்மோன் உற்பத்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. டெஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தின் வளர்ச்சிக்கும் விந்தணு உற்பத்திக்கும் அத்தியாவசியமான ஹார்மோன் ஆகும். இதன் அளவு குறையும்போது, விந்தணு குறைபாடு (Sperm Deficiency) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரிக்கின்றன. இறுதியில் ஆண்மை குறைவு (Infertility in Men) போன்ற தீவிர பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
பெண்களின் கருவுறுதலில் பாதிப்பு:
Advertisment
Advertisements
ஆண்களைப் போலவே, பெண்களின் ஆரோக்கியத்திலும் பாடி ஸ்ப்ரேயின் ரசாயனங்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதே 'பாரபின்', 'ஃபாலட்ஸ்' போன்ற ரசாயனங்கள் பெண்களின் உடலில் எஸ்ட்ரோஜன் (Estrogen) ஹார்மோனின் அளவை குறைக்கும். எஸ்ட்ரோஜன் என்பது பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தில், குறிப்பாக சினைமுட்டை வெளியிடுதல்(Ovulation) செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்மோன் ஆகும். எஸ்ட்ரோஜன் அளவு குறையும்போது, சினைமுட்டை வெளியிடுதல் பாதிக்கப்பட்டு, ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் கருவுறாமை (Infertility in Women) பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
பாதுகாப்பான பயன்படுத்த அறிவுறுத்தல்:
பாடி ஸ்ப்ரேயில் உள்ள ரசாயனங்களின் நேரடித் தொடர்பைத் தவிர்ப்பது மிகவும் முக்கியம். எனவே, பாடி ஸ்ப்ரேயைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்கள், அதை நேரடியாக சருமத்தில் (Directly on Skin) தெளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக, உங்கள் ஆடைகளின் மீது (On Clothes) தெளிப்பதன் மூலம் ரசாயனங்கள் சருமத்துடன் நேரடித் தொடர்புக்கு வருவதைத் தடுக்கலாம். இது ரசாயனங்களின் உறிஞ்சுதலைக் குறைத்து, அதனால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளைத் தவிர்க்க உதவும் என்கிறார் டாக்டர் விஜி.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.