ஃபிரைடு ரைஸ் செய்யும் போது அரிசி கடாயில் ஒட்டிக்கொள்கிறதா? உங்களுக்கான குறிப்பு இதோ!

செஃப் குணால் கபூர் சமீபத்தில் கடாயில் பிடித்த அரிசி (நூடுல்ஸ் கூட) பிரச்சனையை சமாளிக்க உதவும் பயனுள்ள குறிப்பை பகிர்ந்துள்ளார்.

ஃபிரைடு ரைஸ் இல்லாமல், சீன உணவு முழுமையடையாது. காய்கறிகள் மற்றும் பல்வேறு வகையான சாஸ்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும், ஃபிரைடு ரைஸ் அனைவராலும் விரும்பப்படுகிறது. ஆனால் சமையல் செய்யும் போது குறிப்பாக நான்-ஸ்டிக் அல்லது அலுமினிய பாத்திரத்தில் தயாரிக்கும் போது, ​​ அரிசி கடாயில் அடிக்கடி ஒட்டிக்கொள்வது சமையல் ஆர்வலர்களுக்கு தெரியும்.

செஃப் குணால் கபூர் சமீபத்தில் கடாயில் பிடித்த அரிசி (நூடுல்ஸ் கூட) பிரச்சனையை சமாளிக்க உதவும் பயனுள்ள குறிப்பை பகிர்ந்துள்ளார்.

உங்களில் பலர் ஃபிரைடு ரைஸ் தயாரிக்கும் போது, ​​கடாயில் அரிசி ஒட்டிக்கொண்டு சிரமப்படுவதை நான் அறிவேன். ஆனால் இதற்கான எனது எளிய தீர்வு இதோ,” என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

இங்கே முறையை பாருங்கள்

கடாயை (அலுமினியம்/ மற்ற பாத்திரங்கள்) அதிக தீயில் சூடாக்கவும்.

சிறிது எண்ணெய் சேர்த்து கடாயை மெதுவாக நகர்த்தவும். இதனால் எண்ணெய் கடாய் முழுவதும் சமமாக பரவுகிறது.

எண்ணெயை லேசாக புகைக்கவைத்து, பின் இறக்கி தனியாக வைக்கவும்.

கடாயை மீண்டும் சூடாக்கவும். இப்போது அரிசியை வறுக்கும்போது சிறிது நேரம் ஒட்டாமல் இருக்கும்.

இந்த நான்கு எளிய வழிமுறைகள் பயன்படுத்தி, அடுத்த முறை நீங்கள் குடும்பத்திற்கு சீன உணவு சமைக்கும் போது, ​​ஃபிரைடு ரைஸ் அல்லது நூடுல்ஸ் உங்கள் கடாயில் ஒட்டிக்கொண்டிருப்பதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த குறிப்பை முயற்சி செய்து எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Lifestyle news here. You can also read all the Lifestyle news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Does rice stick to the pan while making fried rice here a tip for u

Next Story
வாட்டி வதைக்கும் வெயில்… வியர்வை துர்நாற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பயனுள்ள டிப்ஸ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express