/indian-express-tamil/media/media_files/2025/05/25/iahrhuoj4CVJJtUXQ6WH.jpg)
கடையில் வாங்க வேண்டாம்… வீட்டிலேயே பாத்திரம் கழுவும் லிக்யுட் ஈஸியா ரெடி!
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய பாத்திரம் கழுவும் திரவமானது வேதிப் பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. அதை நாம் பயன்படுத்தும்போது, பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மிகவும் எளிமையான முறையில் பாத்திரம் கழுவும் திரவத்தை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்பது குறித்து புதுமை சமையல் & கிராப்ட்ஸ் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த டிப்ஸ் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
தேவையான பொருட்கள்: 4எலுமிச்சை பழம், பூந்திக்கொட்டை 100 கிராம், உப்பு, வினிகர்.
செய்முறை: முதலில் 4 எலுமிச்சை பழத்தை எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். உள்ளே உள்ள விதையை நீக்கி விடுங்கள். இப்பொழுது பூந்திக் கொட்டையை எடுத்து அதை இடித்தால் உள்ளே கொட்டை கருப்பு நிறத்தில் இருக்கும். அதை நீக்கி விட்டு மேலே உள்ள தோலை ஒரு முறை கழுவி விட்டு இரவில் ஊறவைக்க வேண்டும். காலையில் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து நன்குகாய்ச்சவும். ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஒரு லிட்டர் வரும் வரை நன்கு காய்ச்சவும். பூந்திக்கொட்டையை சேர்த்து இருப்பதனால் அதிக நுரை வரும் அதனால் அதனை கிளறிக் கொண்டே இருக்கவும். இப்பொழுது அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வடிகட்டி மீதமுள்ள எலுமிச்சை, பூந்திக்கொட்டையை மிக்ஸியில் போட்டு அரைத்து மறுபடியும் எடுத்து வைத்த தண்ணீரையும் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். 5 நிமிடம் கொதித்தவுடன் கல் உப்பு ஒரு கப் சேர்த்து மறுபடியும் கொதிக்கவிடவும். பின் ஒரு கப் வினிகரை ஊற்றவும். வினிகர் இந்த திரவம் கெடாமல் இருப்பதற்காக சேர்கிறோம். 5 நிமிடம் கொதித்தவுடன் அந்தத் தண்ணீரை வடிகட்டி வெளியே வைத்துக்கொள்ளலாம். ஒரு மாதத்திற்கு வரும். கெடாமலும் இருக்கும். இந்த இயற்கையான முறையை பயன்படுத்தி நீங்கள் பாத்திரத்தைக் கழுவும்போது பாத்திரம் மிகவும் சுத்தமாகவும் இருக்கும். அதிக நுரை வராது என்பதால் தண்ணீர் குறைவாக செலவு செய்யப்படும்.
நன்றி: puthumai samayal & crafts
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.