இத மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க... அல்சர் அபாயம் இருக்கு: உணவியல் நிபுணர் பிரபா
அமில உணவுகளை காலை எழுந்ததும் முதலில் சாப்பிடுவது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அசிடிட்டி சிக்கலுக்கு வழிவகுக்கும். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 5 உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
அமில உணவுகளை காலை எழுந்ததும் முதலில் சாப்பிடுவது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அசிடிட்டி சிக்கலுக்கு வழிவகுக்கும். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத 5 உணவுகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
இத மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிடாதீங்க... அல்சர் அபாயம் இருக்கு: உணவியல் நிபுணர் பிரபா
இரவு முதல் காலை வரை சராசரியாக சுமார் 8 - 9 மணி நேரங்கள் நாம் எதுவுமே சாப்பிடாமல் இருக்கிறோம். இந்த சூழலில் காலை தூங்கி எழும் போது அந்த நாள் முழுவதும் நாம் உற்சாகமாக செயல்பட உதவும் ஆற்றல் தேவைப்படுகிறது. இதனால் காலை நேரத்தில் நீங்கள் எதை முதலில் எடுத்து கொள்கிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
Advertisment
அந்த வகையில் ஒருசில உணவுகளை காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அவற்றை முதலில் சாப்பிடுவதால் செரிமான பிரச்சனைகள், உப்புசம் அல்லது அசௌகரியம் ஏற்பட கூடும். உதாரணமாக அமில உணவுகளை காலை எழுந்ததும் முதலில் சாப்பிடுவது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் வெறும் வயிற்றில் உட்கொள்ளும் போது அசிடிட்டி சிக்கலுக்கு வழிவகுக்கும். அதே நேரம் ப்ரோட்டீன், ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய சமச்சீரான காலை உணவுகளை எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்த உதவுவதோடு கவனத்தை மேம்படுத்துகிறது மற்றும் காலை நேரம் முழுவதும் நீடித்த ஆற்றலை வழங்குகிறது. சரி, காலை நேரத்தில் வெறும் வயிற்றில் நீங்கள் சாப்பிடக் கூடாத உணவுகளை பட்டியிலிடுகிறார் என்கிறார் உணவியல் நிபுணர் பிரபா.
1. தக்காளியில் அதிகப்படியான அமிலங்கள் இருப்பதால், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் வாயுப் பிரச்னை, நெஞ்செரிச்சல் ஏற்படக்கூடும். அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.
2. காலையில் வெறும் வயிற்றில் காபி அல்லது டீயுடன் அந்த நாளை தொடங்குவது பலரின் வழக்கம். இதிலுள்ள உள்ள ‘காபின்’ ஹைட்ரோக்ளோரிக் அமிலத்தை அதிகளவு சுரக்க வைத்து நெஞ்சு எரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்ற வயிற்று உபாதைகள், குமட்டல், இரைப்பை அழற்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இது சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். எனவே காபி குடிப்பதற்கு முன்பாக காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் பருகுவது நல்லது.
Advertisment
Advertisements
3. சிட்ரஸ் பழங்கள்: பொதுவாக சிட்ரஸ் பழங்கள் ஆரஞ்ச், லெமன், திராட்சை போன்றவை அமிலத்தன்மை கொண்டவை மற்றும் இவற்றை வெறும் வயிற்றில் சாப்பிடும் போது வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்த கூடும். இதனால், அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
4. பால் பொருட்கள்: பால் பொருட்கள் சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும், குறிப்பாக வெறும் வயிற்றில் இவற்றை எடுத்து கொள்வது ஜீரண கோளாறை ஏற்படுத்த கூடும். தயிரில் உடலுக்கு நன்மை தரக்கூடிய புரோபயாட்டிக் பாக்டீரியா உள்ளது. ஆனால், அதை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டால், அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுகிறது.
5. பச்சை காய்கறிகள்: டயட் விஷயத்தில் கவனமாக இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் பச்சை காய்கறிகளைக் கொண்டு சாலட் செய்து சாப்பிடுவது வழக்கம். காய்கறிகளில் இருக்கும் அதிக அளவிலான நார்ச்சத்து வயிற்றை நிறைத்துவிடும். ஆனால் இது அடி வயிறு வலி, வயிறு இறுக்கிப் பிடித்தல் போன்ற உபாதைகளை உண்டாக்கக்கூடியது.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.