இந்த காதலர் தினத்தில், நாம் குறைந்த விலையில் அழகான உடைகளை தேர்வு செய்ய முடியும். இந்நிலையில் நாம் புதிய ஆடைகளை வாங்காமல் தவிர்க்கலாம்.
ஆண்கள் பொதுவாக வெள்ளை பட்டன் டி ஷார்ட் அணிந்து அதற்கு ஏற்றவாறு நம்மிடம் இருக்கும் ஜீன்ஸ் அணிந்தால் மிகவும் நல்ல லுக் கொடுக்கும்.
வேண்டும் என்றால் இதில் நம்மிடம் உள்ள ஜாக்கெட்டை பயன்படுத்தலாம். டீ ஷர்ட் இல்லையென்றால் நல்ல பிளேன் ஷர்ட்டை தேர்வு செய்யலாம். நாம் தேர்வு செய்யும் துணியின் தரம் மிகவும் முக்கியம். குறிப்பாக கார்டன் ஷர்டாக இருந்தால் நல்லது.
இதுபோல வாட்ச், ஸ்டைலிஷ் பெல்ட், நல்ல ஷூவை அணிய வேண்டும். இதுபோல தலைமுடியை ஸ்டைலாக வார வேண்டும். தாடியை சரியான அளவில் திருத்தி வெட்டவும்,
இதுவே பெண்கள் வெல்வட், சில்க் ஆடையை தேர்வு செய்ய வேண்டும். லேஸ் வடிவிலான ஆடையை தேர்வு செய்யலாம். சில்க் துணியில் செய்யப்பட்ட பாவடை அதற்கு மேலாக கையில்லாத டாப் மற்றும் டெனிம் கோட் அணிந்தால் நன்றாக இருக்கும்.
நல்ல கனமான கம்மல் அல்லது நல்ல நெக்லேஸ் அணியலாம். இதுபோல இரு பாலினரும் நல்ல வாசனை உள்ள வாசனை திரவியத்தை பயன்படுத்தலாம்.
Read in English
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“