மழைக்காலத்தில் வீட்டுக்குள் பாம்பு வருமா? இனி பம் வேண்டாம்; ஒரே ஒரு தேங்காய் ஓடு போதும்!

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நீங்கள் பாம்புக்கு பயப்படத் தேவையில்லை. இனிமேல் பாம்பு பயமே உங்களுக்குத் தேவையில்லை. அதற்கு, இந்த ஒரே ஒரு பொருள் போதும்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நீங்கள் பாம்புக்கு பயப்படத் தேவையில்லை. இனிமேல் பாம்பு பயமே உங்களுக்குத் தேவையில்லை. அதற்கு, இந்த ஒரே ஒரு பொருள் போதும்.

author-image
WebDesk
New Update
coconut shells

உங்கள் வீட்டு அருகில் ஒரு பாம்புகூட வராமல் தடுப்பதற்கு ஒரு எளிய ரகசியம் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை… ஒரு தேங்காய் ஓடுதான்! Photograph: (Freepik)

மழைக்காலம் தொடங்கியதும் பலரின் மனதிலும் எழும் ஒரே பயம், 'எங்கே பாம்பு வீட்டுக்குள் வந்துவிடுமோ' என்பதுதான். கிராமங்களில் மட்டுமல்ல, நகர்ப்புறங்களிலும் வீட்டுக்குள் பாம்பு வந்துவிடுமோ என்ற பயம் அதிகம். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். நீங்கள் பாம்புக்கு பயப்படத் தேவையில்லை. இனிமேல் பாம்பு பயமே உங்களுக்குத் தேவையில்லை. அதற்கு, இந்த ஒரே ஒரு பொருள் போதும். உங்கள் வீட்டு அருகில் ஒரு பாம்புகூட வராமல் தடுப்பதற்கு ஒரு எளிய ரகசியம் இருக்கிறது. அது வேறு எதுவும் இல்லை… ஒரு தேங்காய் ஓடுதான்!

Advertisment

தேங்காய் ஓட்டிற்குள் இருக்கும் ஒருவித தனித்துவமான வாசனை இருக்கிறது. அந்த வாசனையை மனிதர்களால் அவ்வளவு எளிதில் உணர முடியாது. ஆனால், பாம்புகளால் இந்த வாசனையை நுகர முடியும். அப்படி நுகர்ந்தவுடன், தேங்காய் ஓட்டிலிருந்து வரும் திசையில் செல்வதை அவை உடனடியாக நிறுத்திவிடுகின்றன. இந்த எளிய தந்திரம் உங்கள் வீட்டுக்குள் பாம்புகள் நுழைவதைத் தடுக்கிறது.

மழைக்காலம், வீட்டின் அருகில் உள்ள மரங்கள், செடிகள், தோட்டங்கள் என ஈரப்பதம் நிறைந்த எல்லா இடங்களும் பாம்புகளுக்குப் பிடித்துப்போகும். இந்த நேரத்தில், தேங்காய் ஓட்டுகளை அவற்றின் பயணப் பாதையில் வைத்தால் போதும்.

coconut shells

Advertisment
Advertisements

முதலில், ஒரு காய்ந்த தேங்காயை எடுத்து, அதன் மேல் உள்ள நார் மற்றும் ஓட்டைப் பிரிக்கவும்.

உள்ளே இருக்கும் தேங்காயை 3-4 துண்டுகளாக வெட்டி, தேங்காய்ப் பூ நீக்கிய ஓடுகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

இந்த ஓடுகளை உங்கள் வீட்டு வாசல் கதவின் இருபுறங்களிலும், தோட்டத்தின் பாதையில், ஜன்னல் அருகே என பாம்புகள் வர வாய்ப்புள்ள இடங்களில் வைக்கவும்.

இந்த வாசனையின் தாக்கம் குறையாமல் இருக்க, ஒவ்வொரு 7-10 நாட்களுக்கு ஒருமுறை புதிய ஓடுகளை மாற்றவும்.

மழை காரணமாக ஓடுகள் நனைந்துவிட்டால், உடனடியாக அவற்றை அகற்றிவிட்டு, காய்ந்த ஓடுகளை வைக்கவும்.

தேங்காய் ஓடு பலன் அளிக்குமா?

வீட்டுக்குள் பாம்புகள் வராமல் தடுப்பதற்கு தேங்காய் ஓடு பலன் அளிக்குமா என்றால், நிச்சயமாக பலன் அளிக்கும். பல தலைமுறைகளாக கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு ரகசியம் இது. எந்தவித ரசாயனப் பொருட்களும் இல்லாமல், இந்த எளிய வழியைப் பின்பற்றி மக்கள் தங்கள் வீடுகளைப் பாதுகாத்து வருகின்றனர். உங்கள் வீட்டிலும் அதிக செடிகள், மரங்கள், திறந்தவெளிகள் இருந்தால், இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முக்கிய குறிப்பு: உங்கள் வீட்டிற்குள் ஏற்கனவே ஒரு பாம்பு இருப்பதாக நீங்கள் நினைத்தால், உடனடியாக ஒரு நிபுணரையோ அல்லது வனத்துறையையோ அழைக்கவும். இந்த குறிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு மட்டுமே!

பொறுப்புத் துறப்பு: மேற்கூறிய தகவல், இணையத்தில் உள்ள பொதுவான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. இது, உங்கள் வீட்டுப் பாதுகாப்பிற்கான ஒரு எளிய தந்திரமே. மேலும் தகவல் தேவைப்பட்டால், நிபுணர்களை அணுகவும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: