Advertisment

மாம்பழம், தர்பூசணி... ஃபிரிட்ஜில் ஏன் வைக்கக் கூடாது தெரியுமா?

Don't store mangoes and watermelons in fridge reason here: மாம்பழம், தர்பூசணி போன்ற உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக்கூடாது. இது உங்களில் பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் ஏன் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கங்கள் இங்கே

author-image
WebDesk
Jul 04, 2021 13:33 IST
மாம்பழம், தர்பூசணி... ஃபிரிட்ஜில் ஏன் வைக்கக் கூடாது தெரியுமா?

நாம் பழங்கள் மற்றும் காய்கறிகளை குளிர் சாதன பெட்டியில் சேமித்து வைத்து உபயோகிக்க பழகிவிட்டோம். அதுவும் கோடை காலத்தில், வெப்பநிலை அதிகரித்து வருவதால், உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது அதிகமாகியுள்ளது. ஆனால், எல்லா உணவுப் பொருளையும் குளிர்சாதன பெட்டியில் சேமிப்பது எப்போதும் தேவையில்லை. சில நேரங்களில், அவ்வாறு செய்வது உணவின் சுவையை மாற்றலாம் அல்லது பல வழிகளில் நம் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

Advertisment

மாம்பழம், தர்பூசணி போன்ற உணவுகளை குளிர்சாதன பெட்டியில் சேமிக்கக்கூடாது. இது உங்களில் பலருக்கு ஆச்சரியமான தகவலாக இருக்கலாம். ஆனால் ஏன் செய்யக்கூடாது என்பதற்கான விளக்கங்கள் இங்கே.

சுவை மாறும்

கோடைக்காலம் என்பது தர்பூசணிகள், முலாம்பழம் மற்றும் மாம்பழங்களின் பருவமாகும். நீர்ச்சத்து அதிகம் உள்ள இந்த பழங்களை கோடைக்காலத்தில் மக்கள் அதிகமாக எடுத்துக் கொள்கிறார்கள். இந்த பழங்களை மக்கள் அதிக அளவில் வாங்கி தங்கள் கழுவி குளிர்சாதன பெட்டியில் சேமிக்க முனைகிறார்கள். ஆனால், இப்படி செய்வது அவற்றின் சுவையை பாதிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?

குறிப்பாக, தர்பூசணியை ஒருபோதும் வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது. நீங்கள் தர்பூசணியை வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால், அது பழத்தின் சுவையையும் அதன் நிறத்தையும் மாற்றக்கூடிய “குளிர்ச்சியான காயத்திற்கு” வழிவகுக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. மேலும், பழத்தை நாம் குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் அதன் உள்ளே பாக்டீரியா வளரும் என்ற பயமும் உள்ளது. நீங்கள் அதை குளிர்சாதன பெட்டியில் சேமிக்க விரும்பினால், முதலில் அதை வெட்டி பின்னர் உள்ளே வைக்கலாம். முடிந்தவரை குளிர்சாதன பெட்டியில் வைக்காமல் பயன்படுத்துவது நல்லது.

வெட்டப்பட்ட பழங்களை திறந்த நிலையில் வைத்திருப்பது நல்லதல்ல.

இதேபோல், மாம்பழங்களையும் முலாம்பழங்களையும் முதலில் வெட்டாமல் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டாம். நீங்கள் அவற்றை வாங்கியதும், அதை சிறிது நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்து, பின்னர் அவற்றை சிறிது நேரம் அறை வெப்பநிலையில் விடவும். அவற்றை சாப்பிடுவதற்கு முன், அவற்றை வெட்டி குளிர்ச்சியாக மாற்ற சிறிது நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். வெட்டப்பட்ட பழங்களை மூடி வைக்க மறக்காதீர்கள். அவற்றை ஒருபோதும் திறந்து வைத்து விடாதீர்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளை தனியாக சேமிக்கவும்

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரே அலமாரியில் சேமித்து வைப்பது ஒரு நல்ல நடைமுறை அல்ல. நீங்கள் எப்போதும் தனித்தனி கூடைகளில் தனித்தனியாக அடுக்கி வைக்க வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்கள் வெவ்வேறு வகையான வாயுக்களை வெளியிடுகின்றன. எனவே, அவற்றை ஒன்றாக சேமித்து வைப்பது அவற்றின் சுவை தரத்தை பாதிக்கும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

#Lifestyle #Food Safety #Healthy Food Tamil News 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment