முட்டை ஓடு வேண்டாம்; இந்த கரைசல் யூஸ் பண்ணுங்க… எல்லா செடியும் நல்லா வளரும்!
வெயில் காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக நீங்கள் என்னதான் உரம் கொடுத்தாலும் அதில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைந்து விடும். செடி, கொடிகள் செழிப்பாக வளர கரைசல் தயாரிப்பது எப்படி? என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
வெயில் காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக நீங்கள் என்னதான் உரம் கொடுத்தாலும் அதில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைந்து விடும். செடி, கொடிகள் செழிப்பாக வளர கரைசல் தயாரிப்பது எப்படி? என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
முட்டை ஓடு வேண்டாம்; இந்த கரைசல் யூஸ் பண்ணுங்க… எல்லா செடியும் நல்லா வளரும்!
அனைவருக்கும் வீட்டில் உள்ள செடி மற்றும் கொடிகள் செழிப்பாக வளர வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக வீட்டில் இருக்கும் அழுகிய காய்கறி, பழம், அரிசி கழுவிய தண்ணீர் என அனைத்தினையும் செடிகளுக்கு உரமாக அளிப்பார்கள். இதோடு மட்டும் இல்லாமல் கடையில் விற்கும் உரத்தினையும் வாங்கி செடிகளுக்கு உரமாக அளித்து வளர்த்து வருவார்கள். செடி, கொடிகள் செழிப்பாக வளர கரைசல் தயாரிப்பது எப்படி? என்று இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
Advertisment
வெயில் காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக நீங்கள் என்னதான் உரம் கொடுத்தாலும் அதில் நுண்ணுயிரிகளின் பெருக்கம் குறைந்து விடும். வேகமாக மண்ணின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு வறண்டுபோகும். இதனால் செடிகளுக்கு தேவையான உயிர் உரம் கிடைப்பதில்லை குறைபாடுகள் ஏற்படும். எனவே செடிகளுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் வறண்டு போக துவங்கி விடுகிறது. கத்திரி வெயில் ஆரம்பமாகியதும் வீட்டில் இருக்கும் அத்தனை செடியும் வாடி வதங்கிப் போய் விட்டிருக்கும். இலைகள் எல்லாம் கருகி பூக்கள் எல்லாம் உதிரவும் துவங்கும். இப்படி வீட்டில் நீங்கள் வளர்க்கும் காய்கறி செடிகள், பூச்செடிகள் எதுவாகினும் வெப்பத்தை தாண்டி செழிப்புடன் வளர சுண்ணாம்பு இருந்தால் போதும். அதை வைத்து கரைசல் எப்படிசெய்வது? என்பது குறித்து ஜோதி பார்மிங் என்ற யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளனர்.
விலையுயர்ந்த இரசாயன உரங்கள், முட்டை ஓடு போன்றவை தேவையில்லை. வெறும் 3 ரூபாய் மதிப்புள்ள சாதாரண சுண்ணாம்பு பாக்கெட். போதும். சுண்ணாம்பை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைத்து, செடிகளுக்கு தெளிக்கலாம். இதில் உள்ள கால்சியம் செடிகளுக்கு சக்திவாய்ந்த ஆதாரமாக மாறுகிறது. வலுவான தாவர வளர்ச்சி மற்றும் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்து ஆகும். பலர் கால்சியத்திற்காக முட்டை ஓடுகளை நம்பியிருக்கிறார்கள், ஆனால் இந்த சுண்ணாம்பு கரைசல் எளிதில் கிடைக்கக்கூடிய மற்றும் பயனுள்ள மாற்றாகும். எத்தகைய வெயிலின் தாக்கத்தையும் தாங்கிக் கொண்டு செடிகள் செழிப்புடன் பசுமையாக வளரும் என்கிறார் தோட்டக்கலை நிபுணர் ஜோதி.