scorecardresearch

ஃபேஸ் மாஸ்க் யூஸ் பண்றீங்களா? இதை மட்டும் உங்க முகத்தில அப்ளை பண்ணாதீங்க!

உங்கள் சருமத்தில் கண்டிப்பாக பயன்படுத்த கூடாத பொருட்கள் இதோ!

beauty tips in tamil
Don’t use these ingredients in your DIY masks

இந்தியாவில் குழந்தைகள் முதல் இளம்பெண்கள், பாட்டிமார்கள் வரை அழகு பராமரிப்பு எப்போதும் வாழ்வின் ஒருபகுதியாக இணைந்து இருக்கிறது. சந்தையில் ஏராளமான தோல் பராமரிப்பு பொருட்கள் இருந்தாலும், நம்மில் பலர் பழமையான வீட்டு வைத்தியத்தை தான் விரும்புகிறோம்.

நாம் அனைவரும் ஆரோக்கியமான சருமத்திற்கான பல இயற்கை வைத்தியங்களை முயற்சித்திருப்போம். ஆனால், அதன் செயல்திறனைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

சில கிச்சன் பொருட்களிலிருந்து நீங்கள் செய்யும் ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க் போன்றவை தயாரிப்பதற்கு எளிதானவை மற்றும் செலவு குறைந்தவை என்றாலும், அவை தோல் பராமரிப்புக்கு நீண்ட கால தீர்வை வழங்காது.

இயற்கையான பொருட்களைக் கொண்டு நீங்கள் செய்யும் ஃபேஸ் மாஸ்க், ஃபேஸ் பேக் போன்றவை “UVA கதிர்களுடன் வினைபுரிந்து உங்கள் சருமத்தில் கொப்புளங்கள், தொற்றுகள் மற்றும் உணர்திறன்களை ஏற்படுத்துகிறது”,

அந்தவகையில் உங்கள் சருமத்தில் கண்டிப்பாக பயன்படுத்த கூடாத பொருட்கள் இதோ!

எலுமிச்சை

வைட்டமின் சி நிறைந்திருந்தாலும், எலுமிச்சையை ஹோம்மேட் ஃபேஸ் மாஸ்க்குகளில் பயன்படுத்தக்கூடாது. அவற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது முகத்தில் பயன்படுத்தும்போது, ​​உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

ஹெல்த்லைனின் கூற்றுப்படி, எலுமிச்சை சாற்றை முகத்தில் தடவுவது பைட்டோஃபோடோடெர்மாடிடிஸ் நோய்க்கு வழிவகுக்கும். (சிட்ரஸ் பழங்களுக்கு ஒரு வகையான தோல் எதிர்வினை). எலுமிச்சை சாற்றை மேற்பூச்சாகப் பயன்படுத்தினால், வெயிலில் எரியும் வாய்ப்புகளை அதிகரிக்கலாம்.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. ஆனால், DIY ஃபேஸ் மாஸ்குகளுக்கு இது நல்லதல்ல. ஹெல்த்லைன் படி, இலவங்கப்பட்டையை தோலில் தடவுவதால் “சிவப்பு மற்றும் எரிச்சல்” ஏற்படலாம். உணர்திறன் உடையவர்கள் அதிலிருந்து விலகி இருக்க வேண்டும்.

ஆப்பிள் சைடர் வினிகர்

சமீபத்தில், ஆப்பிள் சைடர் வினிகர் தோல் நோய்களுக்கான ஒரு பிரபலமான தீர்வாக மாறியுள்ளது. இருப்பினும், இது அதிக அமிலத்தன்மை கொண்டது மற்றும் சருமத்தின் இயற்கையான தடையை சீர்குலைக்கும். மெடிக்கல் நியூஸ் டுடே படி, ஆப்பிள் சைடர் வினிகர், சில சமயங்களில் அதிகமாகப் பயன்படுத்தும் போது, ரசாயன தீக்காயங்களை உண்டாக்கி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.

வெஜிடபிள் ஆயில்

தோல் பராமரிப்பில் தாவர எண்ணெய்களின் பயன்பாடு பழங்காலத்திலிருந்தே பிரபலமாக உள்ளது, ஆனால் எந்தவொரு விரும்பத்தகாத நிகழ்வுகளையும் தடுக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொருவருடைய தோல் வகையும் வித்தியாசமானது, எனவே, ஒருவருக்கு வேலை செய்வது மற்றவருக்கு செய்யாமல் இருக்கலாம்.

இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் டெர்மட்டாலஜியில் வெளியிடப்பட்ட ‘தோல் மருத்துவத்தில் தாவர எண்ணெய்களின் பயன்பாடு: ஒரு கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தாவர எண்ணெய்களால் சில பாதகமான விளைவுகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், காண்டாக்ட் டெர்மடிடிஸ், பிட்ரியாசிஸ் ரோசா போன்ற வெடிப்பு, லிச்செனாய்டு தோல் அழற்சி போன்றவை குறிப்பிடப்பட்டன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news download Indian Express Tamil App.

Web Title: Dont use this ingredients in your diy masks