முகம் துடைப்பது, உணவு சமைக்க பயன்படுத்துவது, பாத்ரூம் சென்று வந்தால் பயன்படுத்துவது என அன்றாட வாழ்வில் டிஷ்யூ பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த டிஷ்யூவை நாம் பயன்படுத்தும் போது அதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாக மருத்துவர் மைதிலி தனது யூடியூப் பக்கத்தில் கூறுகிறார்.
டிஷ்யூ தயாரிப்பதற்கு நான்கு வகையான கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. அந்த கெமிக்கல்ஸ் தான் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கிறது. இதில் சேர்க்கப்படும் மெலமின் என்ற கெமிக்கல் டிஸ்யூ பேப்பருக்கு வடிவத்தை கொடுக்கிறது. இரண்டாவது பாலிமீன் இது டிஷ்யூ பேப்பர் ஈரத்தை உறிஞ்சும் தன்மையை கொடுக்கிறது.
அதேபோல தான் மற்ற இரண்டு கெமிக்கல்களும் ஈரத்தை தக்க வைக்கவும் மெதுவாக இருப்பதை பராமரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த நான்கு கெமிக்கலும் நம் உடம்பில் சிறுநீரக கற்கள் உருவாக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இது தெரிஞ்சா இனி Tissue Paper பயன்படுத்தவே மாட்டீங்க Tissue paper side effects tamil / Dr.Mythili
சிறுநீரக உறுப்பை பாதிப்படைய செய்யும் சுவாசம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை உருவாக்கும்.
நுரையீரல் சம்பந்தப்பட்ட ஆஸ்துமா, நிமோனியா போன்ற பாதிப்புகள் இருந்தால் அந்த நோய் தீவிரத்தையும் டிஷ்யூ அதிகரிக்கும் என்று கூறுகிறார்.
கை துடைக்க டிஷ்யூ பயன்படுத்தும்போது அந்த கையை அப்படியே எடுத்து உடலில் வேறு பகுதியில் வரும்போது அந்த வாசத்தை நுகர்வோம். இப்படி இந்த கெமிக்கல் வாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக சுவாசிக்கும் போது உடலுக்குள் செல்லும்.
இரண்டாவது டிஷ்யூ பேப்பரை வைத்து உணவில் உள்ள எண்ணெயை பிழிந்து எடுக்கும்போது அந்த உணவில் கெமிக்கல் படும். அந்த உணவை சாப்பிடும்போது அந்த கெமிக்கல் உடலுக்குள் செல்லும்.
டிஷ்யூ பேப்பரை தொடர்ச்சியாக பயன்படுத்தினால் சிறுநீரகம், நுரையீரல் உறுப்புகள் பாதிப்படையும். இதில் சேர்க்கப்படும் மற்றொரு வேதிப்பொருள் புற்றுநோய் அபாயத்தை உருவாக்கும்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.