கால்மிதியை கை வலிக்க துவைக்க வேண்டாம்… ஈஸியா இப்படி கிளீன் பண்ணலாம்!
வீடு என்பது வெறும் செங்கற்களும் சிமெண்ட்டும் சேர்ந்த இடமல்ல. அது நமது அமைதி, சந்தோஷம் மற்றும் நினைவுகளின் கருவூலம். இந்த கருவூலத்தை சுத்தமாகவும், வசதியாகவும், அதே நேரத்தில் சுவையான நறுமணத்தோடும் வைத்திருப்பது முக்கியம். இந்தப் பதிவில் உங்கள் வீட்டு வாசலில் இருக்கும் கால்மிதியடி அழுக்கு மிகுதியாக இருக்கும்போது அதனை எளிதாக எப்படி கிளீன் செய்வது என்று பார்போம்.
Advertisment
இந்த ஐடியாவை நீங்கள் தெரிந்து கொண்டால், துணி துவைப்பதில் உங்கள் வீட்டு வாஷிங் மெஷின் தோற்றுப் போகும். அந்த அளவுக்கு சூப்பரான ஒரு ஐடியாவைதான் தெரிந்துகொள்ளப் போகிறோம். வாஷிங் மெஷின் இல்லாமல் கைப்படாமல் கால் மிதிகளை சுலபமாக அழுக்குப்போக துவைப்பது எப்படி. இந்த டிப்ஸை வெறும் கால்மிதிகளுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது. நம் தினமும் துவைக்கும் நம்முடைய ஆடைகளையும் இப்படி துவைத்தால் துணியில் இருக்கும் அழுக்கு சீக்கிரம் போகும்
வீட்டின் நுழைவாயில் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அதுதான் நம் வீட்டுக்குள் வரும் அனைவரையும் வரவேற்கும் முதல் புள்ளி. அழுக்கு படிந்த கால்மிதியடிகள் ஒருபோதும் நல்ல தோற்றத்தை கொடுக்காது. கவலை வேண்டாம். உங்கள் கால்மிதியடிகளைப் புதுப்பிக்க ஒரு எளிய வழி இங்கே உள்ளது. ஒரு பாத்திரத்தில் வெந்நீர் எடுத்து, அதில் சிறிது தூள் சோப்பையும், டிஷ் சோப்பையும் கலந்து, கால்மிதியடிகளை அதில் 10 நிமிடம் ஊற வையுங்கள். பிறகு நன்றாக அலசி வெயிலில் காய வைத்துப்பாருங்கள்! உங்கள் கால்மிதியடிகள் புத்தம் புதியதுபோல் ஜொலிக்கும். கை வலிக்க பிரஷ் போட்டு தேய்க்க தேவையில்லை. இதேபோல், வீட்டில் இருக்கக் கூடிய மற்ற அழுக்கு படிந்த துணிகளை செய்யலாம்.