சீரகம் இரத்த குளுக்கோஸின் அளவைக் குறைப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க உதவுகிறது. சீரகம் உங்கள் செரிமானத்திற்கு சிறந்தது, நச்சுகளை நீக்குகிறது மேலும், நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், சீரக தண்ணீரை விட சிறந்தது எதுவுமில்லை!
எடை இழப்புக்கு சீரக தண்ணீர் சாப்பிடுவதன் நன்மைகள் மற்றும் அதை உங்கள் உணவில் சேர்ப்பதற்கான சிறந்த வழிகள் பற்றி மேலும் அறிய கீழே படியுங்கள்!
எடை இழப்புக்கு சீரகம் ஏன் சாப்பிட வேண்டும்?
நிபுணர்களின் கூற்றுப்படி,சீரகம் செரிமானத்திற்கு உதவுவதிலும், உங்கள் உடல்-அமைப்பிலிருந்து தேவையற்ற நச்சுகளை அகற்றுவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நல்ல செரிமான அமைப்பு, எந்த வகையான நச்சுப் பொருட்களையும் சுத்தம் செய்து, உகந்த எடை மேலாண்மை மற்றும் கொழுப்பு இழப்புக்கு உதவுகிறது.
சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்தால் என்ன நடக்கும்?
சீரக விதைகளை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் சவ்வூடுபரவல் (osmosis) ஏற்படுகிறது, இது விதைகள் தண்ணீரைத் தக்கவைத்துக்கொள்ளும் இயற்கையான செயல்முறையாகும். இதன்மூலம் சீரகத்தின் ஊட்டச்சத்து தண்ணீரில் இறங்கி, நீர் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
இதில் எவ்வளவு கலோரிகள் உள்ளன?
சீரகத்தில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளன, இந்த குறைந்தபட்ச எண்ணிக்கையில், உங்களுக்கு நிறைய நன்மைகள் உள்ளன. இது ஒரு தினசரி பானமாக சாப்பிடுவது நன்மை பயக்கும் என்று கருதப்படுவதற்கும் இதுவே காரணம். உண்மையில், இவ்வளவு குறைந்த கலோரி பானமாக இருந்தாலும், அது உங்களை முழுமையாக நிரப்புகிரது. உணவுக்கு முன் அல்லது உங்களுக்கு பசி வலி வரும்போது ஆரோக்கியமற்ற ஒன்றை சாப்பிடுவதற்கு பதிலாக சீரக தண்ணீரை குடிக்கலாம்.
எத்தனை முறை சாப்பிட வேண்டும்?
இது ஊட்டச்சத்து ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஒரு சிறந்த நச்சு நீக்கும் பானம் என்பதால், அதை பல முறை சாப்பிடலாம். இருப்பினும், நீங்கள் எத்தனை முறை குடிக்க வேண்டும் என்பது உங்கள் இலக்கு மற்றும் தேவைகளைப் பொறுத்தது. நீங்கள் சுவைக்கு பழகிவிட்டால், எத்தனை முறை குடித்தாலும் அது உங்களுக்கு அதிக தீங்கு செய்யாது.
விரைவான எடை இழப்புக்கு, ஒரு நாளைக்கு 3-4 முறை ஜீரா தண்ணீரைக் குடியுங்கள் - காலையில் நீங்கள் எழுந்ததும் (நச்சு நீக்கும் பானமாக), மதிய உணவு போன்ற கனமான உணவுக்கு முன் (நிறைவைத் தூண்டுவதற்கு) மற்றும் இரவு உணவிற்குப் பிறகு (செரிமானத்திற்கு உதவ. ) சிறிது சிறிதாக சீரகத்தை ஊறவைத்து குடிப்பதற்கு பதிலாக, முதலிலேயே ஒரு பெரிய பாட்டிலில் சீரக தண்ணீரை சேமித்து அதை நாள் முழுவதும் குடிக்கலாம்!
சீரக தண்ணீர் குடிப்பதற்கான சிறந்த வழிகள்
தினமும் ஒரே மாதிரியான கொழுப்பை குறைக்கும் பானத்தை குடிப்பது சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தும். இருப்பினும், இது உங்கள் இலக்குகளை அடைவதைத் தடுக்காது. நீங்கள் வேறு ஏதாவது உணவு சாப்பிடும் போது கூட, இதை அடிக்கடி குடித்து வரலாம். இதனால் நீங்கள் சுவையில் சலிப்படையாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.
உங்கள் சீரக தண்ணீரில் இலவங்கப்பட்டை தூள் சேர்ப்பது கூடுதல் நன்மை தரும். எடை அதிகரிப்புப் போராளியாக அறியப்படும் இலவங்கப்பட்டை, குளுக்கோஸ் அளவை நிலைப்படுத்தவும், உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை (கொழுப்பு குவிப்பதற்கு வழிவகுக்கும்) அகற்றவும், அழற்சி எதிர்ப்பு பண்புகளை வழங்குகிறது.
சீரக விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். சாப்பிடுவதற்கு முன், அதில் ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் சேர்க்கவும். இதையே இஞ்சி பொடி/வேர் கொண்டும் முயற்சி செய்யலாம். இருப்பினும், கசப்பான சுவையைக் குறைக்க நீங்கள் ஏதாவது இனிப்பு சேர்க்க வேண்டியிருக்கும்.
சீரக தண்ணீரில் எலுமிச்சை சாற்றை சேர்ப்பதும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். ஏனென்றால், எலுமிச்சை சாற்றில் சிட்ரிக் அமிலம் உள்ளது, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் ஒரு வகையில் அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. நீங்கள் அடிப்படை அல்லது மிதமான உடற்பயிற்சி முறைகளைப் பின்பற்றினால், சீரகத்துடன், எலுமிச்சை கலந்த தண்ணீரை உடற்பயிற்சிக்கு முன் பருகலாம்.
இது தவிர, நீங்கள் வெந்தய மற்றும் சீரக விதைகளின் நன்மைகளை இணைக்க முயற்சி செய்யலாம். விதைகளை தண்ணீரில் வேகவைத்து, பருகுவதற்கு முன், அவற்றை நன்றாக வடிகட்டவும். நீங்கள் ஹார்மோன் ஏற்றத்தாழ்வு பிரச்சனைகள், செரிமான பிரச்சனைகள் அல்லது எடை இழப்புக்கு கூடுதல் மைல் செல்ல விரும்பினால், இவை இரண்டும் ஒன்றாக சேர்ந்து ஒரு பெரிய நன்மையை செய்ய முடியும்.
எச்சரிக்கை
உங்கள் உடல் எடையை குறைக்கும் வேலையை சீரகம் மட்டும் செய்யாது. சரியான உணவை கடைப்பிடிப்பது முதல் உடல் பயிற்சிகள் வரை அனைத்தும் சேர்ந்தால் தான், நீங்கள் விரும்பிய எடை இழப்பு இலக்கை அடைய உதவும்.
இதை உங்கள் உணவின் ஒரு பகுதியாக மாற்ற நீங்கள் திட்டமிட்டால், ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையை முன்கூட்டியே அணுகவும் மற்றும் சிறந்த பலன்களுக்காக மிதமான அளவுகளை உட்கொள்வதை உறுதி செய்யவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.