இனி தோசை மாவு இல்லாமல் இருந்தால், இப்படி ஒரு முறை தோசை செய்யுங்க.
தேவையான பொருட்கள்
1 கப் ஜவ்வரிசி
1 கப் பச்சரிசி மாவு
4 உருளைக்கிழங்கு மசித்தது
அரை ஸ்பூன் உப்பு
தண்ணீர்
1 பச்சை மிளகாய்
சின்ன துண்டு இஞ்சி
1 வெங்காயம்
கொத்தமல்லி
1 கப் துருவிய கேரட்
செய்முறை: ஜவ்வரிசியை நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து இதை அரைத்து கொள்ள வேண்டும். இந்த மாவில், பச்சரிசி மாவு சேர்க்கவும். உருளைக்கிழங்கை தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். இதையும் இத்துடன் சேர்த்துகொள்ளவும். தொடர்ந்து உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, வெங்காயம், துருவிய கேரட் சேர்த்து, தண்ணீர் சேர்த்து கிளரவும். வழக்கமான முறையில் தோசை சுட்டு எடுக்கவும்.