dosa recipes in tamil: தோசை என்றால் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டுமா என்ன? கலர் கலர் சட்னி போல் கலர் கலர் தோசையும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். பாரம்பரிய உணவான இட்லி தோசைக்கு நிகரான ருசியான உணவு எதுவுமே இல்லை என்று சொல்லலாம். ஆவியில் வேகவைக்கப்படும் இட்லி உணவை தான் குழந்தையின் முதல் திட உணவாக கொடுக்கிறோம்.
ஆரோக்கியம் குறைந்த பெரியோர்களுக்கும் இந்த உணவுதான் பிராதானமான உணவாக இருக்கிறது.விதவிதமான உணவு வகைகளாக விலை உயர்ந்த உணவுகள் கொடுக்காத சத்தை அரிசியும் பருப்பும் இணைந்த இட்லி தோசை கொடுத்துவிடுகிறது. தினமும் தோசையா என்று நூடுல்ஸ், பரோட்டா கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைகள் கூட கலர்கலராய் தோசை ஊற்றி கொடுக்கும் போது வெளி உணவுகளைத் தவிர்த்து சப்பு கொட்டி சாப்பிடுவார்கள். விடுமுறை நாட்களில் அதிக நேரம் பிடிக்காத கலர் தோசையை குழந்தைகளுக்கு விருந்தாக்குங்கள்.
காய்கறிகளைக் குழந்தைகளுக்கு எப்படி கொடுப்பது என்று தவிப்பவர்களுக்கு கை கொடுக்கும் அருமையான உணவு முறை இது. குழந்தைகளுக்கு 7 ஆம் மாதம் முதலே காய்கறி சாறு கொடுக்க தொடங்கிவிடுகிறோம். எனினும் வளர்ந்த பிறகு குழந்தைகள் காய்கறி சாப்பிட அடம் பிடிக்கிறார்கள்.
காய்கறியை எப்படி கொடுத்தாலும் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படியாக தோசையில் கலந்து கொடுத்தால் வேண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்.