/indian-express-tamil/media/media_files/2025/06/27/dosai-kal-cleaning-2025-06-27-09-41-55.jpg)
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல நல்ல சமையல் குறிப்புகளை ஸ்ரீ விநாயகா செட்டிநாடு சமையலறை (Sri vinayaga chettinadu samayalarai) என்ற யூடியூப் சேனலில் அளித்துள்ளனர். Photograph: (YouTube/ Sri vinayaga chettinadu samayalarai)
வீட்டில் தோசைக்கல் கரி பிடித்து பிசுபிசுப்பாக இருக்கிறதா, இந்த தோசைக்கல்லை எப்படி கழுவுவது என்று யோசிக்கிறீர்களா, கவலையே படாதீர்கள். தோசைக்கல்லை கேஸ் அடுப்பில் வைத்து இப்படி செய்தால் 10 நிமிடத்தில் பளிசென மாறும். அதை எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.
வீட்டில் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல நல்ல சமையல் குறிப்புகளை ஸ்ரீ விநாயகா செட்டிநாடு சமையலறை (Sri vinayaga chettinadu samayalarai) என்ற யூடியூப் சேனலில் அளித்துள்ளனர். அந்த வகையில், கரிபிடித்த பிசுபிசுப்பான தோசைக்கல்லை 10 நிமிடத்தில் எப்படி பளிச்சென க்ளீன் பண்ணுவது எனக் கூறியுள்ளனர். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
முதலில் உங்கள் வீட்டில் உள்ள கரிபிடித்த பிசுபிசுத்த தோசைக்கல்லை எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, கேஸ் ஸ்டவ்வைப் பற்ற வையுங்கள். தீயை ஹை ஃபிளேமில் வைத்து தோசைக்கல்லை வைத்து நன்றாக சூடுபடுத்துங்கள், பிறகு, ஒரு கத்தியை வைத்து கரி படிந்த இடங்களை எல்லாம் பாதுகாப்பாக சுரண்டி சுத்தப்படுத்துங்கள். ஏனென்றால், தோசைக்கல் சூடாக இருக்கும், கையை சுட்டுக்கொள்ளாதீர்கள். அதே போல பின்பக்கமும் சுரண்டி சுத்தம் செய்யுங்கள்.
அடுத்து தோசைக்கல்லை சூடுபடுத்தி, பாத்திரம் தேய்க்கும் கம்பி ஸ்க்ரப்பை வைத்து தேயுங்கள். அடுத்து, தோசைக்கல்லை மீண்டும் ஸ்டவ்வில் சூடுபடுத்தி, அதில் பேக்கிங் சோடா போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யுங்கள். ஸ்டவ்வை ஆஃப் செய்துவிட்டு தோசைக்கல்லை சுத்தம் செய்யுங்கள். அடுத்து, பாதி எலுமிச்சையை தோசைக்கல்லில் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பிறகு, வழக்கம் போல, பலம் கொண்டு பாத்திரம் தேய்ப்பது போல தோசைக்கல்லை தேய்த்து கழுவுங்கள். அவ்வளவுதான் தோசைக்கல் பளிச்சென மாறியிருக்கும்.
இப்போது தோசை ஊற்ற வேண்டும் என்றால், தோசைக்கல்லை ஸ்டவ்வில் வைத்து முதலில் லேசாக எண்ணெய் ஊற்றி வெங்காயத்தில் தேயுங்கள். அடுத்து, ஒரு ஆம்லேட் போடுங்கள். அடுத்து, வெங்காயம் போட்டு வதக்குங்கள். அதற்கு பிறகு தோசை ஊற்றத் தொடங்குங்கள். இப்படி செய்தால் தோசைக்கல்லில் அடி பிடிக்காமல் தோசை நன்றாக வரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.