20 வருட பழைய தோசைக் கல் 5 நிமிடத்தில் பளிச்; உங்க கையே படாமல் ஈஸியா இப்படி சுத்தம் பண்ணுங்க!

உங்கள் வீட்டில் உள்ள ரொம்ப பழைய தோசைக்கல்லை உங்கள் கையே படாமல் ஈஸியாக சுத்தம் செய்வது என்று ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிறோம். இப்படி செய்தால், அது 20 வருட பழைய தோசைக் கல் ஆனாலும் 5 நிமிடத்தில் ‘பளிச்’னு ஆகிவிடும்.

உங்கள் வீட்டில் உள்ள ரொம்ப பழைய தோசைக்கல்லை உங்கள் கையே படாமல் ஈஸியாக சுத்தம் செய்வது என்று ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிறோம். இப்படி செய்தால், அது 20 வருட பழைய தோசைக் கல் ஆனாலும் 5 நிமிடத்தில் ‘பளிச்’னு ஆகிவிடும்.

author-image
WebDesk
New Update
dosai

20 வருட பழைய தோசைக் கல் ஆனாலும் 5 நிமிடத்தில் ‘பளிச்’னு சுத்தம் செய்ய ஃபாத்துஸ் சமையல் (Fathu's Samayal) என்ற யூடியூப் சேனலில் சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர்.

உங்கள் வீட்டில் உள்ள ரொம்ப பழைய தோசைக்கல்லை உங்கள் கையே படாமல் ஈஸியாக சுத்தம் செய்வது என்று ஒரு சூப்பரான டிப்ஸ் தருகிறோம். இப்படி செய்தால், அது 20 வருட பழைய தோசைக் கல் ஆனாலும் 5 நிமிடத்தில் ‘பளிச்’னு ஆகிவிடும்.

Advertisment

தோசை சுடுவது எளிமையான வேலைதான். ஆனால், ட்தோசைக் கல்லை க்ளீன் பண்ணுவது பெரிய வேலை. ஆனால், 20 வருட பழைய தோசைக் கல் ஆனாலும் 5 நிமிடத்தில் ‘பளிச்’னு சுத்தம் செய்ய ஃபாத்துஸ் சமையல் (Fathu's Samayal) என்ற யூடியூப் சேனலில் சூப்பரான டிப்ஸ் வழங்கியுள்ளனர். 

முதலில் தோசைக் கல்லை இப்படி அடிக்கடி சுத்தம் செய்யக் கூடாது. 3 மாதத்திற்கு ஒருமுறைதான் சுத்தம் செய்ய வேண்டும். அடிக்கடி சுத்தம் செய்தால், தோசை சரியாக வராது. முதலில் உங்கள் வீட்டில் உள்ள பழைய தோசைக் கல்லை எடுத்துக்கொள்ளுக்கள். ஸ்டவ்வைப் பற்ற வைத்து ஹை ஃபிளேமில் வையுங்கள். ஸ்டவ் மீது பழைய தோசைக் கல்லை வையுங்கள். நடுவில் கொஞ்சம் தண்ணீர் உற்றுங்கள். பிறகு பேக்கிங் சோடா மாவு போடுங்கள், ஒரு எலுமிச்சையை பாதியாக கட் பண்ணி அதன் பின்பகுதியில் ஒரு சின்ன கத்தியைச் சொறுகி, அந்த எலுமிச்சையால் தோசைக் கல்லை நன்றாகத் தேயுங்கள். பிறகு, ஆறியதும் கழுவிவிடுங்கள். 

Advertisment
Advertisements

அடுத்து, எலுமிச்சை பேக்கிங் சோடா மாவு போட்டு, ஸ்டீல் ஸ்க்ரப் வைத்து தேயுங்கள். பிறகு, பாத்திரம் கழுவும் லிக்யூட், சோப்பு போட்டு அழுத்தி தேயுங்கள். 

பிறகு, மீண்டும் தோசைக் கல்லை சூடு படுத்தி, தோசைத் திருப்பி மூலம் சுரண்டி எடுங்கள். பிறகு, ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து அதில் தோசைக் கல்லை மூழ்கும்படி வையுங்கள். அதில் எலுமிச்சை பழத்தைக் கட் பண்ணி சாறு பிழிந்துவிடுங்கள். கொஞ்சம் பேக்கிங் சோடா மாவு போடுங்கள்.  நன்றாகக் கொதிக்க வையுங்கள். இப்போது எல்லா அழுக்குகளும் போய்விடும். பிறகு, தோசைக் கல்லை மீண்டும் எடுத்து தேய்த்து கழுவுங்கள். 

அடுத்து, தோசைக் கல்லை தோசை சுடுவதற்கு பக்குவப்படுத்த வேண்டும். தோசைக் கல்லை ஸ்டவ் மீது வைத்து சூடு படுத்தி, ஒரு வெக்காயத்தைப் பாதியாகக் கட் பண்ணி அதில் எண்ணெய் தோட்டு தடவுங்கள். சிறிது எண்ணெய் ஊற்றுங்கள். வெங்காயம் கட் பண்ணி போட்டு வதக்குங்கள். ஒரு முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் மாதிரி செய்யுங்கள். இப்படி செய்தால், புதுசு போல பளிச்னு மின்னும் தோசைக் கல் தோசை சுடுவதற்கு பக்குவப்படும்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: