படுத்துக்கொண்டே இதை செய்யுங்கள்… இடை அழகாக மாறும்; டாக்டர் வேணி
பலரும் உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள், அவர்களுக்காக படுத்துக்கொண்டே செய்யும் ஒரு எளிமையான உடற்பயிற்சியை டாக்டர் வேணி பரிந்துரை செய்துள்ளார்.
பலரும் உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள், அவர்களுக்காக படுத்துக்கொண்டே செய்யும் ஒரு எளிமையான உடற்பயிற்சியை டாக்டர் வேணி பரிந்துரை செய்துள்ளார்.
உடல் எடையைக் குறைப்பதற்கான நல்ல உடற்பயிற்சிகளை ராக்ஃபோர்ட் நியூரோ சென்ட்ர் திருச்சி (RockFort Neuro Centre | Trichy) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் வேணி வழங்குகிறார். படுத்துக்கொண்டே செய்யும் இந்த எளிய உடற்பயிற்சியை செய்தால் இடை அழகாக மாறும் என்று டாக்டர் வேணி கூறுகிறார்.
பலரும் உடல் எடையைக் குறைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள், அவர்களுக்காக படுத்துக்கொண்டே செய்யும் ஒரு எளிமையான உடற்பயிற்சியை டாக்டர் வேணி பரிந்துரை செய்துள்ளார். படுத்துக்கொண்டே செய்யும் இந்த எளிய உடற்பயிற்சியை செய்தால் இடை அழகாக மாறும் என்று டாக்டர் வேணி கூறுகிறார்.
Advertisment
உடல் எடையைக் குறைப்பதற்கான நல்ல உடற்பயிற்சிகளை ராக்ஃபோர்ட் நியூரோ சென்ட்ர் திருச்சி (RockFort Neuro Centre | Trichy) என்ற யூடியூப் சேனலில் டாக்டர் வேணி வழங்குகிறார். உடபயிற்சிகளை செயல்முறையாக காட்டுகிறார். இன்று இடையை அழகாக மாற்றுவதற்கான படுத்துக்கொண்டே செய்யும் உடற்பயிற்சியைக் கூறியுள்ளார்.
மனிதர்களுக்கு ஒரு நாளைக்கு 2,000 கிலோ கலோரிஸ் தேவைப்படுகிறது. இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சற்றி வேறுபடலாம். அதே போல, உடல் எடையைக் குறைக்க, உடற்பயிற்சியின் மூலம் ஒரு நாளைக்கு 5,00 கிலோ கலோரிஸ் எரித்தால், 18 நாட்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்து படிப்படியாக 9 கிலோ கலோரிகளை எரித்தால் 1 கிலோ உடல் எடை குறையும் என்று டாக்டர் வேணி கூறுகிறார். ஆனால், இடையில், கொஞ்சம் ஹெவியான உணவு சாப்பிட்டுவிட்டால் கலோரிகள் கூடிவிடும் என்கிறார்.
உடல் எடையைக் குறைப்பதற்கு உடற்பயிற்சி அவசியம், அந்த வகையில், படுத்துக்கொண்டே செய்யும் இந்த உடற்பயிற்சியை டாக்டர் வேணி பரிந்துரைக்கிறார். இந்த உடற்பயிற்சியை கிருஷ்ணா செய்து காட்டியுள்ளார்.
Advertisment
Advertisements
முதலில் உடற்பயிற்சி செய்வதற்கான தரை விரிப்பை போடுங்கள். அதில், வலது புறம் ஒரு பக்கமாக படுத்துக்கொள்ளுங்கள். இப்போது இடது காலை முன் பின்னாக நகர்த்துங்கள். கால் முட்டியை நேராக வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். இப்படி 5-10 செட் செய்யுங்கள்.
அடுத்து வலது காலை மேலே, கிழே என்று தூக்கி பயிற்சி செய்யுங்கள். இப்படி 5-10 செட் செய்யுங்கள்.
அடுத்து வலது காலை சுழற்றுங்கள். இதையும்இப்படி 5-10 செட் செய்யுங்கள்.
அடுத்து, உங்கள் வலது காலை முன்னால் கொண்டுவந்து 90 டிகிரியில் வைத்துக்கொள்ளுங்கள்.இப்படி இப்படி 5 முறை செய்யுங்கள். அதே போல, உங்கள் வலது காலை முன்னால் கொண்டுவந்து 90 டிகிரியில் வைத்துக்கொள்ளும்போது, இடது காலை தூக்குங்கள். இப்படி ஒரு 5 முறை செய்யுங்கள். அடுத்து, அப்படியே பக்கவாட்டில் படுத்துக்கொண்டு ஓய்வெடுங்கள். மூச்சை இழுத்து விடுங்கள். உங்கள் மூச்சை கவனியுங்கள்.
அடுத்து, அதே போல படுத்த நிலையில் 2 கால்களையும் மேலே, கிழே என்று தூக்கி பயிற்சி செய்யுங்கள். இப்படி ஒரு 5 முறை செய்யுங்கள்.
அடுத்து, அதே போல படுத்த நிலையில் கையை ஊன்றி உங்கள் இடுப்பை தூக்குங்கள். இப்படி ஒரு 5 முறை செய்யுங்கள்.
அடுத்து, அதே போல படுத்த நிலையில், கையை ஊன்றி உங்கள் இடுப்பை தூக்கிய நிலையில், உடலை சுழற்றுங்கள்.
அதே போல படுத்த நிலையில், கையை ஊன்றி உங்கள் இடுப்பை தூக்கிய நிலையில், கையை இடதுகையை 90 டிகிரியில் மேலே தூக்குங்கள். இப்படி இப்படி ஒரு 5 முறை செய்யுங்கள்.
இதே போல, இடது பக்கம் ஒரு பக்கமாக படுத்துக்கொண்டு, மேலே சொன்ன உடற்பயிற்சிகளை செய்யவும்.
அடுத்து, முட்டி போட்டு நின்று கொள்ளுக்கள். ஒரு காலை முன்னால் நீட்டி வைத்து, வலைந்து கால் விரலை தொடுங்கள்.
இந்த உடற்பயிற்சியை செய்தால், வயிற்று தொப்பை குறைவதோடு, இடுப்பில் உள்ள தொப்பை கொழுப்பு கரைந்து, இடுப்பு ஒரு ஷேப்புக்கு வரும். இந்த உடற்பயிற்சியை செய்தால் இடை அழகாக மாறும் என்று டாக்டர் வேணி பரிந்துரைக்கிறார்.