கர்ப்ப காலத்தில் பயணம்... எந்த மாதத்தில் செய்யலாம்? டாக்டர் ஐஸ்வர்யா பதில்
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா, வேண்டாமா, பயணம் செய்ய வேண்டுமானால் எந்த மாதத்தில் பயணம் செய்யலாம் என்பது குறித்து டாக்டர் ஐஸ்வர்யா விளக்கமாகக் கூறியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா, வேண்டாமா, பயணம் செய்ய வேண்டுமானால் எந்த மாதத்தில் பயணம் செய்யலாம் என்பது குறித்து டாக்டர் ஐஸ்வர்யா விளக்கமாகக் கூறியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து டாக்டர் ஐஸ்வர்யா டாக்டர் மம்மிஸ் (@Doctormommies) என்ற யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
பெண்கள் கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா, வேண்டாமா, பயணம் செய்ய வேண்டுமானால் எந்த மாதத்தில் பயணம் செய்யலாம் என்பது குறித்து டாக்டர் ஐஸ்வர்யா விளக்கமாகக் கூறியுள்ளார்.
Advertisment
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து டாக்டர் ஐஸ்வர்யா டாக்டர் மம்மிஸ் (@Doctormommies) என்ற யூடியூப் சேனலில் பேசியுள்ளார்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்வது குறித்து டாக்டர் ஐஸ்வர்யா கூறுகையில், “கர்ப்ப காலத்தில் பயணம் செய்யலாமா, வேண்டாமா என்பதைப் பார்ப்போம். கர்ப்ப காலத்தில் எப்போது பயணம் செய்யலாம் என்றால், கர்ப்பமாக இருக்கும்போது பாதுகாப்பான காலம் என்றால் அது 3 மாதத்தில் இருந்து 7 மாதங்கள் வரைக்கும். ஏனென்றால், முதல் 3 மாதத்தில் கர்ப்பம் கலைவதற்கான வாய்ப்பு அதிகம், அப்புறம், டெலிவரி ஆவதற்கான வாய்ப்ப்கள் அதிகம், கர்ப்பிணி பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்வது அவசியம்.
கர்ப்பிணி பெண்கள் எதில் பயணம் செய்யலாம் என்று கேட்பார்கள், ரயிலில் போவது நல்லது. ஏனென்றால், நீங்கள் காலை நீட்டிக்கொண்டே போகலாம், கழிப்பறை வசதியும் இருக்கும்.
Advertisment
Advertisements
இரண்டாவது விமானத்தில் போகலாம், விமானத்தில் போகும்போது, ஏல் சீட் புக் பண்ணிக்கொள்ளுங்கள், அடிக்கடி வாஷ் ரூம் போகிற மாதிரி இருக்கும்.
மூன்றாவது, காரில் பயணம் செய்யலாம். கர்ப்பமாக இருக்கும்போது எல்லா இடத்துக்கும் ரயில் வசதியோ, விமான போக்குவரத்து வசதியோ இருக்காது அப்போது, காரில் பயணம் செய்யலாம். காரில் மெதுவாக செல்ல வேண்டும். அதனால், ஓட்டுநரை மெதுவாக ஓட்டச் சொல்லுங்கள்.
நான்காவது, பேருந்தில் பயணம். கர்ப்ப காலத்தில் பேருந்தில் பயணம் செய்வது கொஞ்சம் ரிஸ்க்தான். ஏனென்றால், சாலைகள் மோசமாக இருக்கலாம். அதனால், சிலீப்பர் பஸ் கிடைத்தால் புக் பண்ணிக்கொண்டு செல்லுங்கள்.
கர்ப்ப காலத்தில் பயணம் செய்யும்போது, உங்களுடைய மெடிக்கல் ரெக்கார்ட்ஸ்களை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். ஒருவேளை, நீங்கள் ஊருக்கு போய் ஏதாவது டாக்டரைப் பார்க்க வேண்டும் என்றால், நீங்கள் இதுவரை என்ன சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்பது அவர்களுக்கு கண்டிப்பாகத் தெரிய வேண்டும். அதனால், கர்ப்பிணி பெண்கள் பயணம் செய்யும்போது, உங்களுடைய மெடிக்கல் ரெக்கார்ட்ஸ் உடன் எடுத்துக்கொண்டு செல்லுங்கள்.” என்று டாக்டர் ஐஸ்வர்யா ஆலோசனைகளை வழங்கி உள்ளார்.