ஜிம் போக முடியலையா? கவலைய விடுங்க; வீட்டில் இருந்தபடி இப்படி சீக்கிரமாக எடையை குறைக்கலாம்: டாக்டர் அகில் ஷர்மிளா டிப்ஸ்
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என ஜிம் போக முடியவில்லை என்று கவலைப்டுகிறீர்களா, கவலைப்படாதீர்கள், வீட்டில் இருந்தபடி சீக்கிரமாக எடையைக் குறைக்கலாம், ஆனால் அதற்கு நீங்கள் இந்த 7 விஷயங்களைப் ஃபாலோ பண்ண வேண்டும் என டாக்டர் அகில் ஷர்மிளா ஆலோசனை கூறுகிறார்.

உடல் எடையை குறைக்க ஜிம் போக முடியவில்லை என்று கவலை வேண்டாம், வீட்டில் இருந்தே எடையைக் குறைப்பதற்கு டாக்டர் அகில் ஷர்மிளா ஆலோசனை கூறுகிறார். (YouTube/ @ Dr Akil Sharmila)
உடல் எடையைக் குறைக்க வேண்டும் என ஜிம் போக முடியவில்லை என்று கவலைப்டுகிறீர்களா, கவலைப்படாதீர்கள், வீட்டில் இருந்தபடி சீக்கிரமாக எடையைக் குறைக்கலாம், ஆனால் அதற்கு நீங்கள் இந்த 7 விஷயங்களைப் ஃபாலோ பண்ண வேண்டும் என டாக்டர் அகில் ஷர்மிளா ஆலோசனை கூறுகிறார்.
Advertisment
உடல் எடையை குறைக்க ஜிம் போக முடியவில்லை என்று கவலை வேண்டாம், வீட்டில் இருந்தே எடையைக் குறைப்பதற்கு தனது யூடியூப் சேனலில் டாக்டர் அகில் ஷர்மிளா ஆலோசனை கூறுகிறார்.
டாக்டர் அகில் ஷர்மிளா கூறுகையில், “உடல் எடையைக் குறைக்க வேண்டும் என ஜிம் போக முடியவில்லையே என கவலைப்படாதீர்கள், வீட்டில் இருந்தே வேகமாக எடையைக் குறைக்க இந்த 7 விஷயங்களைக் கடைபிடியுங்கள்.
முதலில் உங்கள் உடலை நீங்கள் லவ் பண்ணுங்கள். உங்கள் உடல் எப்படி இருந்தாலும் நீங்கள் நேசியுங்கள். உங்கள் உடலை நன்றாக வைத்துக்கொள்ள முடியும் என நம்புங்கள்.
Advertisment
Advertisements
இரண்டாவது உங்களுடைய சாப்பாட்டு அளவை குறையுங்கள். அரிசி உணவை குறைத்து காயகறிகள், புரதச்சத்து உணவை எடுத்துக்கொள்ளுங்கள்.
மூன்றாவது, தண்ணீர், ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் சுடு தண்ணீர் குடியுங்கள். தண்ணீர் குடிப்பதை நினைவு படுத்தும் செயலி ஒன்றை உங்கள் போனில் டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு எத்தனை மணி நேரத்துக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும்.
நான்காவது உங்களுடைய போனில் இருக்கக்கூடிய உணவு டெலிவரி ஆப்களை டெலிட் பண்ணுங்கள். ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தவுடன் உடனே ஆர்டர் செய்து சாப்பிடுகிறீர்கள். அதை தடுக்கலாம், பணமும் மிச்சமாகும்.
ஐந்தாவது, கண்டிப்பாக 10 மணியிலிருந்து 5 மணி வரைக்கும் தூங்க வேண்டும் என்ற ஒரு பழக்கத்திற்குள் வாருங்கள். ஒரே டைமில் தூங்கில் ஒரே நேரத்தில் எழுந்திருப்பதும் உடல் எடையைக் குறைக்க உதவும்.
ஆறாவது, காலையில் 20 நிமிடம் மாலையில் 20 நிமிடம் நடைபயிற்சி செய்யுங்கள். முதலில் 20 நிமிடம் நடைபயிற்சியைத் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 1 மணி நேரமாக நடைபயிற்சியை அதிகரியுங்கள். இப்படி நடைபயிற்சி செய்தால் உடல் எடை குறையும்.
ஏழாவது, ஒரு முத்திரை, அதாவது நம்முடைய இரண்டு கைகளிலும் மோதிர விரலை மடக்கி அதை கட்டை விரலால் பிடித்துக்கொண்டு தினமும் 20 நிமிடம் தியானம் செய்யுங்கள். மன அழுத்தம் குறையும், மன அழுத்தம் குறைந்தால் உடல் எடை குறையும், உங்களுடைய எண்ணங்களின் ஓட்டம் செயல்முறையை கவனிக்கலாம். அடுத்து, பிளாங்க் போஸ் முறை உடற்பயிற்சியை 30 நொடிகளில் தொடங்கி, 1 நிமிடம் 3 நிமிடம் வரை பயிற்சி செய்யுங்கள். இதையெல்லாம் செய்தால் 1 மாதத்திற்கு 2-3 கிலோ உடல் எடை குறைக்கலாம். இதை மெல்ல மெல்ல ஒவ்வொரு வாரமாகவும் நீங்கள் கடைபிடிக்கலாம்.” என்று கூறுகிறார்.