கருவேப்பிலை முடி உதிர்வை தடுக்குமா? சர்வதேச ஆராய்ச்சி கூறுவது என்ன? டாக்டர் அருண்குமார்

கருவேப்பிலையை சாப்பிட்டால் முடி வளருமா அல்லது கருவேப்பிலையை எண்ணெயில் கலந்து தடவினால் முடி வளருமா அல்லது கருவேப்பிலை முடி உதிர்வைத் தடுக்குமா என்ற கேள்விகள் குறித்து சர்வதேச ஆராய்ச்சி கூறுவது என்ன என்று டாக்டர் அருண்குமார் விவரிக்கிறார். அவற்றை இங்கே காண்போம்.

author-image
WebDesk
New Update
Dr Arunkumar curry leaves

கருவேப்பிலை சாப்பிட்டால், கருவேப்பிலையை தடவினால் முடி வளரும், முடி உதிர்வைத் தடுக்கலாம் என மக்கள் மத்தியில் நிலவும் பேச்சுகள் குறித்து டாக்டர் அருண்குமார் சர்வதேச ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்று விவரித்துள்ளார்.

கருவேப்பிலையை சாப்பிட்டால் முடி வளருமா அல்லது கருவேப்பிலையை எண்ணெயில் கலந்து தடவினால் முடி வளருமா அல்லது கருவேப்பிலை முடி உதிர்வைத் தடுக்குமா என்ற கேள்விகள் குறித்து சர்வதேச ஆராய்ச்சி கூறுவது என்ன என்று டாக்டர் அருண்குமார் விவரிக்கிறார். அவற்றை இங்கே காண்போம்.

Advertisment

டாக்டர் அருண்குமார் தனது யூடியூப் சேனலில் பல ஆரோக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், கருவேப்பிலை சாப்பிட்டால், கருவேப்பிலையை தடவினால் முடி வளரும், முடி உதிர்வைத் தடுக்கலாம் என மக்கள் மத்தியில் நிலவும் பேச்சுகள் குறித்து டாக்டர் அருண்குமார் சர்வதேச ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்று விவரித்துள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.

கருவேப்பிலை சாப்பிட்டால், முடிவை உதிர்வைத் தடுக்கலாம், முடி வலுவடையும், முடி வளரும் என்ற நம்பிக்கைகள் குறித்து ஆராய்ச்சிகள் என்ன கூறுகிறது என்றால் அந்த சாதகமான முடிவுகளைக் கூறவில்லை என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார். பொதுவாக எல்லா இலை தழைகளிலும் காணப்படும் ஆல்கனாய்ட்ஸ், ஃபிளாவனாய்ட்ஸ் கருவேப்பிலையில் உள்ளது. கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் என்ற சத்து கருவேப்பிலையில் உள்ளது. 

Advertisment
Advertisements

அதுமட்டுமில்லாமல், ஆண்டி ஆக்ஸிடண்ட் என்கிற ஆக்ஸிஜனேற்றத்தால் செல்களுக்கு ஏற்படுகிற சேதத்தைத் தடுக்கிறது. இது மட்டுமில்லாமல், மஹாநிம்பின், கிரிநிம்பின் என்ற பொருட்களும் கருவேப்பிலையில் உள்ளது. ஆராய்ச்சியில் இந்த கருவேப்பிலையை சாப்பிடக் கொடுத்தவர்களுக்கு முடி உதிர்வைத் தடுப்பது தொடர்பான எந்த பலனையும் அளிக்கவில்லை. ஆனால், இந்த கருவேப்பிலையை சாப்பிடுவதால், உடலுக்கு வேறு சில ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

கருவேப்பிலை சாப்பிடுவதால் அதிலுள்ள, முடி உதிர்வைத் தடுப்பது தொடர்பாக எந்த சம்பந்தமும் இல்லை என்று ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

ஆனால், எலிகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் மேலே தடவுவதால் பயனிருக்கிறது என்ற ஆராய்ச்சி முடிவுகளில் தெரிய வந்துள்ளது என்றும் ஆனால், இந்த ஆராய்ச்சி இன்னும் மனிதர்களில் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். சித்த மருத்துவம், ஆயூர்வேத மருத்துவர்கள் இதை ஒரு ஆராய்ச்சி செய்யலாம் என்கிறார்.

மேலும், கருவேப்பிலையை சாப்பிடுவதால், கணையம், மூத்திரைப்பை புற்றுநோய் வராமல் தடுக்க வாய்ப்பு உள்ளது. அல்சர் தடுக்கக்கூடிய தன்மை இருக்கிறது என்று டாக்டர் அருண்குமார் கூறுகிறார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: