நிறைய ஷாம்பூ, ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதாலும், விட்டமின் இ, மெலனின் பிக்மெண்ட் குறைவாலும் முடி நரைக்கிறது என்று டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.
பலருக்கும் இளநரை என்பது சாதாரணமாகக் காணப்படுகிறது இதற்கு என்ன செய்யலாம் என்று டாக்டர் ஆஷா லெனின் சில டிப்ஸ்களை கூறியுள்ளார். நிறைய ஷாம்பூ, ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதாலும், விட்டமின் இ, மெலனின் பிக்மெண்ட் குறைவாலும் முடி நரைக்கிறது என்று டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.
Advertisment
நரைத்த முடியை கருமையாக்க பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் டாக்டர் ஆஷா லெனின் கூறியதை இங்கே தருகிறோம். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் அடங்கிய திரிபலா சூரணம், மலச்சிக்கல் இல்லாமல் இருப்பதற்கு சாப்பிடுவார்கள். இளமையா இருப்பதற்கும் இந்த திரிபலா சூரணம் சாப்பிடுவார்கள்.
மருதாணி இலையை எடுத்து 200 மி.லி டம்பளர் தண்ணீரில் போட்டு, அதனுடன் 1 டீஸ்பூன் டீ தூள் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். முக்கால் டம்பளர் வந்த உடன் அதை ஊற்றி மருதானி இலையை மிக்ஸியில் அரைக்க வேண்டும். அரைத்த பிறகு, திரிபலா சூரணம் 1 டீஸ்பூன் கலந்துவிட்டு இரவில் ஃபிரிட்ஜில் வைத்துவிடுங்கள். மறுநாள் காலையில், அப்படியே தலைக்கு தடவினால், சளி பிடிக்கும், சைனஸ் பிரச்னை வரும். அதனால், அதை அரிசி வடித்த கஞ்சி, பழைய சாத தண்ணீருடன் சூடு பண்ணிவிட்டு, கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு கலந்து தடவினால் தடவும்போதே கலர் பிடித்துவிடும். 10 நிமிடம் கழித்து சும்மா கழுவி விட வேண்டும். இது இயற்கையான ஹேர் டை என்று டாக்டர் ஆஷா லெனின் கூறுகிறார்.