தூங்கி எந்திருச்சா குதிகால் வலி இருக்கா? துண்டு வைத்து இப்படி செய்யுங்க… ஈசியா குறையும்; டாக்டர் பாலசுப்பிரமணியன்
தூங்கி எழுந்திருக்கும்போது குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆலோசனை கூறியுள்ளார். துண்டு வைத்து இப்படி செய்தால் குதிகால் வலி ஈசியா குறையும் குறையும் என்று பரிந்துரைக்கிறார்.

டாக்டர் பாலசுப்பிரமணியன் தனது யூடியூப் சேனலில் பல பயனுள்ள மருத்துவ ஆரோக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். Photograph: (YouTube/ Dr Balasubramanian)
தூங்கி எழுந்திருக்கும்போது குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆலோசனை கூறியுள்ளார். துண்டு வைத்து இப்படி செய்தால் குதிகால் வலி ஈசியா குறையும் குறையும் என்று பரிந்துரைக்கிறார்.
Advertisment
டாக்டர் பாலசுப்பிரமணியன் தனது யூடியூப் சேனலில் பல பயனுள்ள மருத்துவ ஆரோக்கிய ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அந்த வகையில், தூங்கி எழுந்திருக்கும்போது குதிகால் வலி ஏற்படுவதற்கான காரணம் என்ன, அதற்கு நிரந்தர தீர்வு என்ன என்று கூறியுள்ளார். அதை அப்படியே தருகிறோம்.
குதிகால் வலி குறித்து டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகையில், “சிலருக்கு குதிகால் வலி இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த குதிகால் வலி தூங்கி எழுந்து நடக்கும்போதும், நீண்ட நேரம் உட்கார்ந்து இருந்துவிட்டு நடக்கும்போது குதிகால் வலி இருப்பதாகக் கூறுகிறார்கள். கொஞ்ச நேரம் நடந்தால் அந்த வலி சரியாகி விடும். இந்த குதிகால்வலி ஏற்படுவதற்கு காரணம், பாதங்கால் சவ்வில் இறுக்கம் ஏற்பட்டு அதில் புண் ஏற்படும்போது, இப்படி குதிகால் வலி ஏற்படுகிறது.
இந்த பாதங்கால் சவ்வு இறுக்கமாகி புண் ஏற்படுவதற்கு அதிக உடல் எடை, நீரிழிவு, சரவாங்கி என்கிற மூட்டு வாதம் ஆகியவை காரணமாக இருக்கலாம். எக்ஸ்ரே மற்றும் கிளினிக்கல் பரிசோதனை மூலம் குதிகால் வலி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், இந்த குதிகால் வலியைக் குறைக்க சில பயிற்சிகளை செய்தால் போதும்.
Advertisment
Advertisements
தூங்கி எழுந்திருக்கும்போது கால்களை கீழே வைப்பதற்கு முன்னால், அமர்ந்துகொள்ளுங்கள், கால் மேல் கால் போட்டுக் கொள்ளுங்கள், இறுகிய பாத சவ்வை இளக்க வேண்டும். அதற்காக, காலைப் பிடித்து மசாஜ் செய்து விடுங்கள். ஒரு கையை குதிகாலைப் பிடித்தபடியும் ஒரு கை முன் பாதத்தையும் பிடித்தபடி விரித்து 5 நொடிகள் அப்படியே பிடித்திருங்கள். பிறகு மீண்டும் மசாஜ் செய்யுங்கள், மீண்டும் அப்படி பிடித்திருங்கள். அப்படியே காலை வெதுவெதுப்பான வெந்நீரில் கால்களை கொஞ்ச நேரம் வைத்திருங்கள், மீண்டும் கால்களை மசாஜ் செய்யுங்கள்.
அடுத்து, காலையில் தூங்கி எழுந்திருக்கும்போது ஒரு துவைத்த டவலை எடுத்து முன் பாதத்தில் மாட்டி இழுத்துப் பிடியுங்கள். அதிக அளவில் குதிகால் வலி இருப்பவர்கள் 10 முறை செய்யுங்கள், ஓரளவு வலியைப் பொறுத்துக்கொள்ளும் அளவுக்கு இருப்பவர்கள் 20 முறை செய்யலாம், இப்படி செய்துவந்தால் குதிகால் வலி சரியாகும் என்று டாக்டர் பாலசுப்பிரமணியன் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.