நெல்லிக்காய் வைத்து ஹேர் டை இப்படி ரெடி பண்ணுங்க… வெள்ளை முடி கரு கருவென மாறும்; டாக்டர் தீபா அருளாளன்
நெல்லிமுள்ளி பவுடரை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்து அப்ளை பண்ணினால் வெள்ளை முடி எல்லாம் கருகருவென மாறும் என்று டாக்டர் தீபா அருளாளன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நெல்லிமுள்ளி பவுடரை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்து அப்ளை பண்ணினால் வெள்ளை முடி எல்லாம் கருகருவென மாறும் என்று டாக்டர் தீபா அருளாளன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
டாக்டர் தீபா அருளாளன் காஸ்மோ ஹெல்த் அஃபிசியல் (@cosmohealthoffl) என்ற யூடியூப் சேனலில் நெல்லிமுள்ளி பவுடரை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது என்று கூறியுள்ளார். Photograph: (YouTube/ @cosmohealthoffl)
நெல்லிமுள்ளி பவுடரை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்து அப்ளை பண்ணினால் வெள்ளை முடி எல்லாம் கருகருவென மாறும் என்று டாக்டர் தீபா அருளாளன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
Advertisment
டாக்டர் தீபா அருளாளன் காஸ்மோ ஹெல்த் அஃபிசியல் (@cosmohealthoffl) என்ற யூடியூப் சேனலில் நெல்லிமுள்ளி பவுடரை வைத்து இயற்கையான முறையில் ஹேர் டை செய்வது என்று கூறியுள்ளார். அதை அப்படியே இங்கே தருகிறோம்.
நாட்டு மருந்துக் கடைகளில் நெல்லிமுள்ளி 50 கிராம் வாங்கிக்கொள்ளுங்கள். இதை வெயிலில் நல்லா காய வைத்துவிடுங்கள். அதை நல்லா பவுடர் பண்ணி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். நெல்லிமுள்ளி என்றால் ஒன்றுமில்லை, நெல்லிக்காயின் வற்றல் அல்லது உலர்ந்த வடிவம். இது மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. கடுக்காய் 50 கிராம் பவுடர் வாங்கிக்கொள்ளுங்கள். இவற்றை ஒரு கடாயில் வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
Advertisment
Advertisements
முன்தினம் நாள் இரவு, இந்த பவுடரை ரோஸ் வாட்டரில் போட்டு சந்தனப் பக்குவத்தில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை தலை முடியில் தடவி 1 மணி நேரம் அப்படியே விட்டுவிடுங்கள். அதற்கு தலைமுடியை அலசிக்கொள்ளலாம். இப்படி வாரத்தில் 2 நாள் தடவலாம்.
இப்படி தடவினால், முடி நல்லா கருப்பாக மாறிவிடும். இன்னும் கேட்கப்போனால், செம்பட்டையாக இருக்கக்கூடிய முடி, பிரவுனியாக இருக்கக்கூடிய முடி, வெள்ளை நிற நரை முடி, எல்லா முடிகளும் வேகமாக நிறத்தை எடுத்துக்கொண்டு கருப்பாக அழகாக மாறிவிடும்” என்று டாக்டர் தீபா அருளாளன் கூறுகிறார்.