உடலில் எந்த இடத்தில் வலி இருந்தாலும் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்து சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம். இதன் மூலம் வலி குறையும் என மருத்துவர் தீபா கூறுகிறார்.
விளக்கெண்ணெய்யை அப்படியே பயன்படுத்தக் கூடாது. விளக்கெண்ணெய்யில் அன்டி இப்ஃப்ளமேட்டரி இருக்கிறது. முருங்கை இலையிலும் அன்டி இப்ஃப்ளமேட்டரி உள்ளது. இவை இரண்டையும் பயன்படுத்தலாம்.
முருங்கை இலை மிகச்சாதாரணமாக கிடைக்கக்கூடியது. ஒரு கொத்து முருங்கை இலை எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். விளக்கெண்ணெய் சூடாகும் போது முருங்கை இலை போட்டு வதக்க வேண்டும்.
பின்னர், முருங்கை இலையை எடுத்து காட்டன் துணியில் போட்டு மடித்து, வலி இருக்கும் இடத்தில் வைக்கலாம். உதாரணமாக கால் பகுதியில் வலி எடுத்தால், அப்பகுதியில் இதனை வைக்க வேண்டும். இதன் பின்னர், அந்த இடத்தில் இருக்கும் விளக்கெண்ணெய்யை அப்படியே தேய்த்து மசாஜ் செய்யலாம்.
மற்றொரு முறையில், முருங்கை இலையை சற்று அரைத்து எடுக்க வேண்டும். இதனை, விளக்கெண்ணெய்யில் போட்டு வதக்க வேண்டும். இது பசை பக்குவத்திற்கு வந்ததும், அதை எடுத்து வலி இருக்கும் இடங்களில் தடவலாம். இவ்வாறு செய்தால் வலி குறையும் என மருத்துவர் தீபா தெரிவித்துள்ளார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“