நம் உடலில் உள்ள கல்லீரல் 500 வெவ்வெறு வேலைகளை செய்கிறது என்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. அந்த கல்லீரலை பாதுகாப்பாகவும் ஆரோக்கியாமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். ஆனால், மது ஒரு அளவுக்கு மேல குடிப்பது கல்லீரலை பாதிக்கிறது. கல்லீரலைப் பாதுகாக்க கேரட், கீரை போன்ற நார்ச்சத்து உள்ள காய்கறிகளை சாப்பிடுவது ரொம்ப முக்கியம் என்று டாக்டர் தீப்தி கூறுகிறார்.
டாக்டர் தீப்தி ஜாம்மி தனது யூடியூப் சேனலில் கூறியிருப்பதாவது: “நம் உடலில் உள்ள கல்லீரல் 500 வெவ்வெறு வேலைகளை செய்கிறது, இந்த கல்லீரல்தான் நம் உடலில் உள்ள உள்ளுறுப்புகளில் மிகவும் கனமானது. கிட்டத்தட்ட 1 1/2 கிலோ இருக்கும். உடலில் வலது பக்கம், விலா எலும்புக்கு கிழே கல்லீரல் இருக்கிறது. கல்லீரல் பக்கத்திலேயே இருப்பதுதான் பித்தப்பை என்கிறோம். சாப்பிடுகிற உணவுகளை கிளைகோஜென்னாக ஸ்டோர் செய்வதே இந்த கல்லீரல்தான். கல்லீரல்தான் பித்தப்பை செயல்பட பைல் ஆசிட்டை அளித்து சுத்தம் செய்கிறது. அப்போதுதான் சாப்பிடும் உணவு செரிமானம் செய்யப்படும். உடலில் உள்ள கழிவுப் பொருட்களை கல்லீரல் வெளியேற்றும். இப்படி முக்கியமான கல்லீரலை பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று டாக்டர் தீப்தி ஜாம்மி கூறுகிறார்.
அதிக கொழுப்புச் சத்துள்ள பொருட்கள் சாப்பிடுவது, துரிட உணவு சாப்பிடுவது, மது குடிப்பது, போன்ற காரணங்களால் நாம் கல்லீரல் பாதிக்கப்படுகிறது. கொழுப்பு படிகிறது.
தொடர்ந்து, கல்லீரலில் கொழுப்பு படியும்போது அல்லது தொடர்ந்து மது குடிப்பதால் பாதிக்கப்படும் கல்லீரல் சுருங்கத் தொடங்குகிறது. 3 கட்டங்களுக்கு பிறகு, கல்லீரல் செயல்படமுடியாமல் போகிறது. கொழுப்பு படிந்த ஃபேட்டி கல்லீரல் என்பது உணவுமுறை, வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படுகிறது. இந்த ஃபேட்டி கல்லீரல் இருந்தால் முயற்சி செய்தால் மீண்டும் நல்ல நிலைக்கு மாற்றிவிடலாம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை டாக்டர் தீப்தி ஜாம்மி கூறுகிறார்.
பாலில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதுடன், கல்லீரலைப் பாதுகாக்கிறது. அதனால், மஞ்சளை சாப்பாட்டிலும் சேர்த்துக்கொள்ளலாம்.
அடுத்து, முற்றிலுமாக மது குடிப்பதை கைவிட வேண்டும். துரித உணவுகள், நொறுக்குத் தீனிகள் நிறைய சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஃபேட்டி லிவர் இருந்தால், கொழுப்புச் சத்து உள்ள பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படி அல்ல, உடலுக்கு தேவையான மிதமான அளவு கொழுப்புச் சத்து உள்ள உணவை சாப்பிடலாம். உடற்பயிற்சி செய்து, உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை பராமரியுங்கள்.
நார்ச்சத்து உள்ள முட்டைக்கோஸ், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, கீரை, ஒட்ஸ் ஆகியவற்றில் நார்ச்சத்து உள்ளது. இந்த மாதிரியான காய்கறிகளை சாப்பிடுங்கள். இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவு என்று டாக்டர் தீப்தி ஜாம்மி கூறுகிறார். மேலும், ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி கல்லீரலைப் பாதுகாப்பதற்கான வழி என்றும் கூறுகிறார்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.