அடிக்கடி நெட்டி முறிப்பீர்களா? உஷார்… இந்த பிரச்சனைகள் வரலாம்; டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை

பலருக்கும் விரல்களுக்கு நெட்டி முறிப்பது என்பது ஒரு பழக்கமாக இருக்கும்.இந்த நெட்டி முறிக்கும் பழக்கத்தால் என்ன பிரச்னைகள் வரலாம் என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். நெட்டி முறிக்கும் பழக்கத்தால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Dr Karthikeyan Netti muriththal

பலருக்கும் விரல்களுக்கு நெட்டி முறிப்பது என்பது ஒரு பழக்கமாக இருக்கும்.இந்த நெட்டி முறிக்கும் பழக்கத்தால் என்ன பிரச்னைகள் வரலாம் என்பது குறித்து டாக்டர் கார்த்திகேயன் எச்சரித்துள்ளார்.

எல்லாருக்கும் விரல்களில் நெட்டி முறிப்பது என்பது ஒரு பழக்கம். வீட்டில் அடிக்கடி நெட்டி முறித்தால், இதைப் பார்க்கும் பெரியவர்கள், இப்படி செய்யாதே, இப்படி நெட்டி முறித்தால், சீக்கிரம் மூட்டுவலி வந்துவிடும், மூட்டு தேய்ந்துபோய்விடும் என்று சொல்வார்கள். அதனால், இந்த நெட்டி முறிக்கும் பழக்கத்தால், சீக்கிரம் மூட்டு தேய்மானம் வந்துவிடுமா? இது நல்ல பழக்கம்தானா, முதலில் இந்த நெட்டி முறிப்பது நல்ல பழக்கம்தானா? நெட்டி முறிப்பது ஏன் நடக்கிறது என்பதைப் பற்றி டாக்டர் கார்த்திகேயன் விளக்கமாகக் கூறியுள்ளார்.

Advertisment

நெட்டி முறிக்கும் பழக்கம் குறித்து தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் கூறியிருப்பதாவது: 

நெட்டி முறித்தலை ஒரு பலூனை உதாரணத்தைக் கொண்டு சொல்ல முடியும். முதலில் நம் உடலில் எல்லா எலும்பு ஜாயிண்ட்களும் எப்படி இருக்கிறது. முதுகுத்தண்டு எடுத்துக்கொள்ளுங்கள், ரொம்ப நேரம் நாம் உக்காந்து இருப்போம். அப்போது, நாம் முதுகை பின்னாடி வளைத்தால் அப்போது சொடக், சொடக் என்று சத்தம் கேட்கும். இது எதனால் ஏற்படுகிறது. நம் உடலில் உள்ள எல்லா எலும்புகளுமே ஜாயிண்ட்கள்தான். அதனால்தான் நம்மால் கை, கால்கள், விரல்களை மடக்க முடிகிறது, நீட்ட முடிகிறது. ஒவ்வொரு ஜாயிண்ட்டிலும், எலும்பு என்பது உறுதியான பகுதி, எலும்புகளுக்கு இடையில் உள்ள சவ்வு பகுதி கார்டிலேஜ். எல்லா எலும்பு ஜாயிண்ட் பகுதிகளிலும் எலும்புகளுக்கு இடையே இருக்கும் சவ்வுப் பகுதி, உராய்வைக் குறைப்பதற்கான ஒன்று. இந்த சவ்வு கிழிந்தால், உராய்வு ஏற்பட்டு மூட்டு வலி வரும், இது அனைவரும் அறிந்ததே. 

Advertisment
Advertisements

இந்த எலும்புகள், சவ்வுகள் எல்லாவற்றையும் சுற்றி சாக் என்கிற ஒரு பை இருக்கிறது. அந்த பைகளுக்கு உள்ளே ஒரு எண்ணெய் இருக்கிறது, அதை சைனோவியல் ஃபுளுயிட் என்கிறார்கள். இந்த சைனோவியல் திரவம், ஒரு வழவழப்புத் தன்மையை மூட்டுகளுக்கு கொடுக்கிறது. அதுதான் மூட்டுகள் தேய்மானம் ஆகாமல் பாதுகாக்கிறது. இந்த  சைனோவியல் திரவம் எலும்புகளின் ஜாயிண்ட்களுக்கு உள்ளே தான் இருக்கிறது. இந்த எண்ணெயில் நீர்க்குமிழிகள் ஏற்பட்டலாம். இவை ஒன்றுக்கொன்று உராயும்போது ‘பட்’டென வெடிக்கிறது. இதுதான் சொடக்கு சத்தம். நாம் ஒரே நிலையில் இருக்கும்போது, வாயுக்கள் சேர்ந்து எலும்பு ஜாயினண்டகளுக்கு இடையே சைனோவியல் திரவத்தில் நீர்க்குமிழிகளை உருவாக்குகிறது. நாம் நெட்டி முறிக்கும்போது சத்தம் கேட்கிறது. இது இயல்புதான்.  

நெட்டி முறித்தல் என்பது ஆண்களைவிட பெண்கள்தான் அதிகம் செய்கிறார்கள் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

நீண்ட நேரம் உக்கார்ந்து எழுந்திருக்கும்போது, அந்த திரவங்களில் குமிழிகள் உருவாகின்றன. 

ஒருமுறை நெட்டி முறித்துவிட்டால், மறுபடியும் நெட்டி முறிக்க முயற்சி செய்தால், நெட்டி விழுவதில்லை. ஏனென்றால், அந்த திரவத்தில் இருந்த குமிழிகளை உடைத்துவிட்டோம். அதனால், நெட்டி விழாது. ஆனால், 15-30 நிமிடம் கழித்து நெட்டி முறித்தால், சத்தம் கேட்கும்.

நெட்டி முறித்தலால் உண்டாகக் கூடிய பிரச்னைகள், ஒருவர் எப்போதாவது அரிதாக நெட்டி முறித்தல் செய்கிறார்கள் என்றால், பெரிய பிரச்னை இல்லை என்றாலும் அடிக்கடி நெட்டி முறிப்பது, மூட்டு தேய்மானம், பிடிப்பு திறன் குறைவு ஏற்படுவதாக கருத்துகள் இருக்கின்றன. ஆனால், இந்த நெட்டி முறிப்பது குறித்து ஆய்வுகள் என்ன சொல்கிறது. ஒரு கனடா நாட்டு மருத்துவர் 10 ஆண்டுகளாக ஒரு கையில் நெட்டி முறிக்கிறார். இன்னொரு கையில் நெட்டி முறிக்கவில்லை. ஒவ்வொரு வருடமும் தனது கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்க்கிறார். மருத்துவ பரிசோதனை செய்கிறார். அதில், இரண்டு கைகளுக்கு இடையே எந்த மாறுபாடும் இல்லை. நெட்டி முறித்த, நெட்டி முறிக்காத கைகளில் மூட்டுத் தேய்மானம் பிரச்னை இல்லை.

நெட்டி முறிப்பது குறித்து இன்னொரு ஆராய்ச்சி 1990-ல் நடத்தப்பட்டது. அதில் 74 பேர் தினமும் நெட்டி முறிப்பவர்கள். 226 பேர் நெட்டி முறிக்காதவர்கள், இதில் நெட்டி முறிக்காதவர்கள் எண்ணிக்கை அதிகம். 6 மாதங்களாக 74 பேர் தினமும் நெட்டி முறித்தவர்களின் விரல்களில் சிறிதளவு வலிமை குறைந்துள்ளது. விரல்களில் மெல்லிய வீக்கம் தெரிகிறது.  இரண்டு குழுவிலும் மூட்டுத்தேய்மானத்தில் மாற்றம் இல்லை. நெட்டி முறித்தலால், மூட்டுத் தேய்மானம் பிரச்னைகள் இல்லை.

ஆனால், சில ஆராய்ச்சிகள், நெட்டி முறித்தலால், கை விரல்களின் வலிமை சிறிதளவு குறைகிறது. இன்னொன்று நெட்டி முறிக்கும்போது, அடிபடுதலும் நடக்கிறது. குறிப்பாக பார்பர் ஷாப்பில், நெட்டி முறிப்பது என்ற பெயரில் கழுத்தை திருப்பி பிரச்னையான நிகழ்வுகள் இருக்கிறது. தானாகவே நெட்டி முறிக்கும்போது, தசைநார்கள் பாதிப்படைவது உண்டு. அடிபட வைப்பதும் சில சமயங்களில் நடக்கிறது. 

அதனால், நெட்டி முறிப்பதால், சின்னசின்ன பிரச்னைகள் இருப்பதாக சொல்வதால், அடிக்கடி நெட்டி முறிப்பதை தவிர்க்கப் பார்க்கலாம். ஆனால், நெட்டி முறிப்பதால், மூட்டுத்தேய்மானமோ, பக்கவாதமோ பெரிய பிரச்னையும் கிடையாது” என்று டாக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Lifestyle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: