ஒரு நாளைக்கு 10 நிமிடம் இந்த உடற்பயிற்சி... இதயத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது: அடித்துச் சொல்லும் டாக்டர் கார்த்திகேயன்
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செல்லுங்கள். அதற்கும் நேரம் இல்லை என்றால், ஒரு நாளைக்கு 10 நிமிடம் இந்த உடற்பயிற்சி செய்யுங்கள், இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று டாக்டர் கார்த்திகேயன் உறுதியாகச் சொல்கிறார்.
ஒரு நாளைக்கு 10 நிமிடம் இந்த உடற்பயிற்சி செய்யுங்கள், இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி செல்லுங்கள். அதற்கும் நேரம் இல்லை என்றால், ஒரு நாளைக்கு 10 நிமிடம் இந்த உடற்பயிற்சி செய்யுங்கள், இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று டாக்டர் கார்த்திகேயன் உறுதியாகச் சொல்கிறார்.
Advertisment
பரபரப்பான உலகத்தில் பலரும் பிஸியாக இருக்கிறார்கள். சிலருக்கு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிற அளவுக்குகூட நேரமில்லாமல் இருக்கும். உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினமும் அரை மணி நேரமாவது நடை பயிற்சி செல்ல வேண்டும். ஆனால், அரை மணி நேரம் கூட நேரமில்லை என்று சொல்பவர்கள் உண்டு. அவர்களுக்கு தனது யூடியூப் சேனலில் டாக்டர் கார்த்திகேயன் ஒரு எளிதான உடற்பயிற்சியை 10 நிமிடம் செய்தால், இதயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று கூறுகிறார்.
அந்த உடற்பயிற்சி என்ன, எப்படி செய்ய வேண்டும் என்பதை டாக்டர் கார்த்திகேயன் கூறுவதை அப்படியே தருகிறோம்: “டாக்டர் நான் ரொம்ப பிஸியானவன், அதனால, ஒரு நாளைக்கு நடைபயிற்சி செய்ய வேண்டும் என்று சொன்னால் அது என்னால் முடியாது என்று சொல்கிறவராக இருந்தால், அமெரிக்க இருதயவியல் சங்கத்தினர் என்ன சொல்கிறார்கள், என்றால் ஒரு நாளைக்கு 10 நிமிடம் இதை செய்தால், நன்றாக செயல்படும் என்கிறார்கள். அது என்ன உடற்பயிற்சி என்றால், அது வேறு ஒன்றும் இல்லை. ஸ்கிப்பிங்தான். மூட்டு வலி இல்லாதவர்கள் ஒரு நாளைக்கு 10 நிமிடம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்யுங்கள். லேசாக தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக அதிகரியுங்கள். முதலில் 10 எண்ணிக்கையில் ஸ்கிப்பிங் செய்யுங்கள். பிறகு, ரெஸ்ட் விடுங்கள். பிறகு, 10 என்ற எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 20, 30 என்று அதிகரியுங்கள். ஆனால், ஒரு நாளைக்கு 10 நிமிடம் செய்யுங்கள் போதும். உங்கள் இதயம் பீக் பெர்ஃபார்மன்ஸில் இயங்கும்” என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
Advertisment
Advertisements
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.