உட்கார்ந்து கொண்டே இதை செய்யுங்க… 10 நிமிடத்தில் 40 மி.லி சர்க்கரை குறைக்கலாம்; டாக்டர் கார்த்திகேயன்
வெளியில் சென்று நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா, கவலையேபடாதீர்கள் உட்கார்ந்துகொண்டே இந்த பயிற்சியை செய்தால் போதும் 10 நிமிடத்தில் 40 மி.லி சர்க்கரையைக் குறைக்கலாம் என டாக்டர் கார்த்திகேயன் என்று பயிற்சிகளை செய்து காட்டியுள்ளார்.

டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் மருத்துவ ஆலோசனைகளையும் உடற்பயிற்சி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். Photograph: (YouTube/ Doctor Karthikeyan)
வெளியில் சென்று நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய நேரமில்லையா, கவலையேபடாதீர்கள் உட்கார்ந்துகொண்டே இந்த பயிற்சியை செய்தால் போதும் 10 நிமிடத்தில் 40 மி.லி சர்க்கரையைக் குறைக்கலாம் என டாக்டர் கார்த்திகேயன் என்று பயிற்சிகளை செய்து காட்டியுள்ளார்.
Advertisment
டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் மருத்துவ ஆலோசனைகளையும் உடற்பயிற்சி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில், உட்கார்ந்துகொண்டே இந்த பயிற்சியை செய்தால் போதும் 10 நிமிடத்தில் 40 மி.லி சர்க்கரையைக் குறைக்கலாம் என்ற ஒரு எளிமையான உடற்பயிற்சியை செய்து காட்டலாம்.
டாக்டர் கார்த்திகேயன் கூறும் உடற்பயிற்சியைப் பார்த்து செய்வோம் வாருங்கள், முதலில் ஒரு நாற்காலியில் சவுகரியமாக உட்கார்ந்துகொள்ளுங்கள். உங்கள் இரண்டு கைகளையும் பக்கவாட்டில் இருந்து மேலே உயர்த்தி இரண்டு கைகளையும் தொடுங்கள், இரண்டு கைகளையும் மேலே உயர்த்தும்போது, மூச்சை உள்ளே இழுங்கள். 5 நொடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, மெதுவாக கைகளை பக்கவாட்டில் கீழே இறக்குங்கள். இறக்கும்போது, மூச்சை வெளியே விடுங்கள், இப்படி 5 முறை செய்யுங்கள்.
அடுத்து, உங்கள் 2 கைகளையும் உங்கள் தொடைகளுக்கு அடியில் வைத்துக்கொண்டு இரண்டு கால்களையும் நேராக நீட்டி மேலே தூக்குங்கள், அப்போது மூச்சை உள்ளே இழுங்கள், அதே போல, 5 நொடிகள் அப்படியே வைத்திருந்துவிட்டு, கால்களைக் கீழே விடுங்கள், அப்போது மூச்சை வெளியே விடுங்கள். ஆனால், கால்கள் தரையில் படக்கூடாது. இதே போல 10 முறை செய்யுங்கள்.
Advertisment
Advertisements
அடுத்து, அதே போல உட்கார்ந்துகொண்டு, இரண்டு கால்களையும் நேராக நீட்டிக் கொள்ளுக்கள், ஒரு காலை மேலே தூக்குங்கல், அப்போது மூச்சை உள்ளே இழுங்கள், அந்த காலை கீழே கொண்டுவரும்போது அடுத்த காலை மேலே தூக்குங்கள், இப்போது மூச்சை வெளியே விடுங்கள், இப்படி 10 முறை செய்யுங்கள்.
அடுத்து, மூச்சை உள்ளே இழுத்தபடி, இரண்டு கைகளையும் கால்களையும் நீட்டி மேலே தூக்குங்கள், மீண்டும் கீழே கொண்டு வரும்போது மூச்சை வெளியே விடுங்கள், இப்படி 10 முறை செய்யுங்கள், உங்களுக்கு தேவை என்றால் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம்.
அடுத்து, மூச்சை உள்ளே இழுத்தபடி, இரண்டு கைகளையும் ஒன்றாக முன்னே கொண்டுவாருங்கள், அதே நேரத்தில், கால்களை நேராக நீட்டி மேலே தூக்குங்கள். மூச்சை வெளியே விட்டபடி, மீண்டும் கைகளை பக்கவாட்டில் கொண்டு செல்லுங்கள், கால்களை கீழே விடுங்கள், இப்படி 10 முறை செய்யுங்கள்.
டாக்டர் கார்த்திகேயன் கூறும் மேலும் சில பயிர்சிகளை செய்தால், 10 நிமிடத்தில் 40 பாயிண்ட் சர்க்கரையைக் குறைத்துவிடலாம். இந்த பயிற்சியை நீங்களும் செய்து பாருங்கள்.