/indian-express-tamil/media/media_files/2025/07/10/dr-karthikeyan-warns-exercise-2025-07-10-08-33-15.jpg)
டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் பல பயனுள்ள ஆரோக்கிய மருத்துவ ஆலோசனைகள், மூலிகளைப் பற்றிய ஆய்வுகள் மற்றும் அதன் பயன்களையும் கூறி வருகிறார்.
முதுகுவலி எதனால் வருகிறது, முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது என்பதை விளக்கி, முதுகுவலி இருந்தால் இந்த 5 உடற்பயிற்சிகள் செய்யாதீர்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.
டாக்டர் கார்த்திகேயன் தனது யூடியூப் சேனலில் பல பயனுள்ள ஆரோக்கிய மருத்துவ ஆலோசனைகள், மூலிகளைப் பற்றிய ஆய்வுகள் மற்றும் அதன் பயன்களையும் கூறி வருகிறார். அந்த வகையில், முதுகு வலி எதனால் வருகிறது, முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை எப்படி செய்யப்படுகிறது, முதுகுவலி இருந்தால் என்னென்ன உடற்பயிற்சிகள் செய்யக்கூடாது என்பதை விளக்கியுள்ளார்.
முதுகுத் தண்டு வடத்தில் டிஸ்க் எல் 3, எல் 4, எல் 5 போன்றவைகளின் டிஸ்க்களில் ஏற்படும் அழுத்தம் காரணமாக முதுகுவலி ஏற்படுகிறது. அதன் நிலையைப் பொறுத்து, உடற்பயிற்சி மூலம் சரி செய்யலாம் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
மேலும், முதுகுவலி உள்ளவர்கள் யூடியூப் மற்றும் இணையதளத்தில் பரிந்துரைக்கும் இந்த 5 உடற்பயிற்சிகளை செய்யக்கூடாது என்று எச்சரிக்கிரார்.
கீழே படுத்துக்கொண்டு முதுகைத் தூக்குங்கள், ஸ்ட்ரெச் பண்ணுகிற உடற்பயிற்சியை செய்யக்கூடாது.
கீழே குப்புற படுத்துக்கொண்டு உடலின் முன்பகுதியை உயர்த்துகிற மிட் பேக் எக்ஸ்டென்சியன் (Mid-Back Extension) என்கிற உடற்பயிற்சியை செய்யக் கூடாது. இது முதுகுத் தண்டுவடத்துக்கு அழுத்தம் அதிகரிக்கும்.
கீழே குனிந்து காலை மடித்துக்கொண்டு ஸ்ட்ரெச் செய்யும் உடற்பயிற்சியை செய்யாதீர்கள். இதை செய்தால் உங்கள் முதுகுவலி அதிகரிக்கும்.
மல்லாந்து படுத்துக்கொண்டு காலை முன்னால் கொண்டு வருவது, கழுத்தை முன்னாடி கொண்டு வருவது போன்ற உடற்பயிற்சிகளை செய்யக் கூடாது.
அதே போல, மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மடக்கிக்கொண்டு, இன்னொரு காலை அதன் மேல் வைத்துக்கொண்டு செய்கிற உடற்பயிற்சியை செய்யக் கூடாது.
அதே போல, மல்லாந்து படுத்துக்கொண்டு, இரண்டு கால்களையும் மடக்கி வயிற்றுக்கு மேலே பிடித்துக்கொண்டால், முதுகு வலி குறையும் என்று சொன்னால் இதையும் நம்பாதீர்கள். இந்த மாதிரியான உடற்பயிற்சியையும் செய்யாதீர்கள் என்று டாக்டர் கார்த்திகேயன் கூறுகிறார்.
முதுகுவலியைப் பொறுத்த வரை அறுவை சிகிச்சை என்பது ரொம்ப ரிஸ்க்கியான விஷயம் என்று கூறும் டாக்டர் கார்த்திகேயன், கீ ஹோல் அறுவை சிகிச்சை செய்வதன் மூலம் நரம்புகள் பாதிப்பு இல்லாமல் செய்யலாம் என்று கூறுகிறார். மேலும், முதுகுவலிக்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பதில்லை என்றும் முதுகுத் தண்டு டிஸ்க் உடைதல், உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.