கழுத்து வலி. பெரும்பாலானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக அதிகநேரம் கம்ப்யூட்டரில் செலவிடுபவர்களுக்கு கழுத்து வலி என்பது தொடர்ந்து இருக்கிறது. மிதமானது முதல் தீவிரமான வலி வரை பாதிப்பை ஏற்படுத்தும் கழுத்துவலி, ஒரு வேலையில் முழுமையாக ஈடுபட முடியாத அளவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. கழுத்து வலி வர என்ன காரணம், அறிகுறிகள் எப்படி இருக்கும், தடுப்பது எப்படி? என்று குறித்து மருத்துவர் கௌசிக் கூறுவதை பற்றி குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
கழுத்து வலி- காரணங்கள்: கழுத்து வலி பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. அன்றாட வேலைகள், மருத்துவ நிலைமை, உட்கார்ந்திருக்கும் போது அல்லது நிற்கும்போது கழுத்தை சரியான நிலையில் வைக்காமல் இருத்தல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், நீண்ட நேரம் விளையாடுதல், உயரமான தலையணைகளைப் பயன்படுத்துதல், தூக்கமின்மை, கழுத்துகளில் ஏற்படும் அடி, முதுகெலும்பில் ஏற்படும் தேய்மானம், கனமான பொருட்களைத் தூக்குதல், திடீரென ஏற்படும் தசை பிடிப்பு போன்றவை கழுத்து வலியை ஏற்படுத்துகின்றன.
கழுத்து வலி - அறிகுறிகள்: தீவிரமான கழுத்து வலி முதல் குறைவான வலி வரை அதன் அறிகுறிகள் வேறுபடுகின்றன. கழுத்துப் பகுதிகளில் விறைப்பு அல்லது இயக்குவதற்கு சிரமமாக இருந்தால் கவனிக்க வேண்டும். கழுத்துப்பகுதியில் குத்துவது போல தோன்றுதல், தலை அசைக்கும் போது ஊசி போன்று குத்துதல், குனிந்து நிமிர்வதில் சிரமம், குனிய முடியாத அளவுக்கு வலி, தலையில் இருந்து தோள்பட்டை மற்றும் கைகளுக்கு பரவக்கூடிய வலி, கை மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, பலவீனம், கழுத்தை நகர்த்துவதில் சிரமம் போன்றவை அறிகுறிகள் ஆகும். உங்களுக்கு தொடர்ந்து கழுத்து வலி இருக்கிறது என்றால் மருத்துவ உதவி தேவைப்படுகிறது என்று அர்த்தம். இருப்பினும் தீவிரமான அறிகுறிகளைத் தவிர மற்றவற்றை நம்மால் வீட்டிலேயே வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக சரி செய்து விட முடியும் என்கிறார் மருத்துவர் கௌசிக்.
எளிய வீட்டு வைத்தியங்கள்:
கழுத்துவலியை போக்குவதற்கு ஹாட் பேக் அல்லது ஐஸ் பேக் பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம். இது கழுத்து வலியை போக்குவதற்கான மிக எளிய வீட்டு வைத்தியம் ஆகும். ஹாட் வாட்டர் ஒத்தடம் கொடுப்பதன் மூலம் தசைகள் தளர்ந்து ரத்த ஓட்டம் சீராக நடைபெறும். ஐஸ் வாட்டர் ஒத்தடம் கொடுப்பது மூலம் வலி குறைந்து நிவாரணம் கிடைக்கும். தற்போது சந்தைகளில் ஹாட் வாட்டர் பேக் மற்றும் ஐஸ் வாட்டர் பேக்குகள் கிடைக்கின்றன. உங்கள் வீட்டில் இவை இல்லை என்றால் ஐஸ் ஒத்தடம் கொடுப்பதற்கு ஐஸ் க்யூப் ஒரு துணியில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். ஹாட் வாட்டருக்கு துணியை வெந்நீரில் நனைத்து அந்த சூட்டினை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கலாம் என்கிறார் மருத்துவர் கௌசிக்.
/indian-express-tamil/media/post_attachments/wp-content/uploads/2023/05/iStock-600177128-770715.jpg)
கழுத்தை நீட்டி செய்யக்கூடிய மென்மையான பயிற்சிகளை செய்வதன் மூலம் தசைகளை வலுப்படுத்தி இந்த கழுத்து வலியை சரி செய்யலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தசைகளில் நெகிழ்வுத் தன்மை மேம்பட்டு, மோசமாக இருக்கும் நிலையை சரி செய்ய முடியும். இது கழுத்து வலியை குறைக்க உதவுகிறது. கழுத்தை சாய்த்து பயிற்சி செய்தல், சுழற்சி முறையில் கழுத்தை பயன்படுத்துதல் போன்றவை எளிதாக செய்யக்கூடிய பயிற்சிகள் ஆகும். இந்த பயிற்சிகளை செய்வதற்கு மிகவும் கவனம் தேவை. வலி அதிகமாக இருந்தால் பிசியோதெரபிஸ்டை ஆலோசித்து பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் கௌசிக்.
கழுத்து வலி தவிர்க்க ஆலோசனை: கழுத்து வலியை சரி செய்வதற்கு அல்லது கழுத்து வலி ஏற்படாமல் முன்கூட்டியே தடுப்பதற்கு மருத்துவர் கௌசிக் சில ஆலோசனைகளை வழங்கி உள்ளார். தூங்கும்போது உயரமான தலையணையை பயன்படுத்தாமல் இருத்தல், பணி செய்யும் போது சிறிது நேரம் எழுந்து நடத்தல், வசதியான இருக்கையை பயன்படுத்துதல் வேண்டும். கழுத்து மற்றும் முதுகுப்புற தசைகளில் அழுத்தம் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு கழுத்து வலி மற்றும் அதனால் ஏற்படும் அசௌகரித்தை குறைக்க உதவும் என்கிறார் மருத்துவர் கௌசிக்.
கழுத்து வலிகள் ஏற்படுவதற்கு உடலில் நீர்ச்சத்து குறைபாடும் காரணமாக உள்ளது. எனவே உங்களது தினசரி உணவுகளில் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். கோடைகாலத்தில் திரவ உணவுகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவும். கழுத்து பகுதியில் உள்ள வலிகளை குறைப்பதற்கு ஒரு சிறந்த முறையாகும். தினசரி நமது உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் அருந்துவதன் மூலம் நமது முதுகெலும்பில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க முடியும் என்கிறார் மருத்துவர் கௌசிக்.
கழுத்து வலிக்கு எப்போது மருத்துவ சிகிச்சை தேவை?: கழுத்து வலி என்பது சாதாரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புதான். எனவே வீட்டிலேயே அதனை நீங்கள் மேற்குறிப்பிட்ட வழிகளின் மூலம் சரி செய்து விடலாம். இருப்பினும் நீண்ட நாட்களுக்கு கழுத்து வலி பாதிப்புகள் இருந்தால் கட்டாயமாக நீங்கள் மருத்துவ உதவியை நாட வேண்டும். உங்கள் கழுத்துகளில் வேறு எந்த சோதனைகளையும் வீட்டில் செய்ய வேண்டாம். கழுத்து வலிக்கான அடிப்படை காரணத்தை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவர் மேற்கொள்வார். கழுத்து வலி என்பது தினசரி வேலையை பாதிக்கக்கூடிய பிரச்னையாகும். எனவே அதனை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம் என்கிறார் மருத்துவர் கௌசிக்.
மருத்துவர் கௌசிக், பி.பி.டி, எம்.பி.டி முடித்து மதுரையில் பிசியோதெரபி மருத்துவராக பணியாற்றி வருகிறார். அவரது தொடர்பு எண்: +91 95974 27633